அங்க ஓகே ஆயிடுச்சு...இங்க விஜய்-அஜித் சேர்ந்து நடிப்பாங்களா?

By

மும்பை: இந்தி சூப்பர் ஸ்டார்கள் ஷாருக்கானும் சல்மான் கானும் நீண்ட இடைவெளிக்குப் பின் இணைந்து நடிக்க உள்ளனர். இதே போல தமிழிலும் விஜய்- அஜித் இணைந்து நடிப்பார்களா? என்று கேள்வி எழந்துள்ளது.

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் ஷாருக்கானும் சல்மான் கானும். ஆரம்ப காலத்தில் இருவரும் இணைந்து படங்களில் நடித்து வந்தாலும் பிறகு நிறுத்திக்கொண்டனர். தனித் தனியாகவே நடித்து வருகின்றனர்.

கடந்த 20 வருடங்களாக, இப்படி தனித்தனியாக நடித்து வந்தாலும் சில படங்களில் இணைந்து கவுரவ வேடங்களில் நடித்துள்ளனர்.

டியூப்லைட், ஸீரோ

டியூப்லைட், ஸீரோ

சல்மான் கானின் டியூப்லைட் படத்தில் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதே போல ஷாரூக்கின் ஸீரோ படத்தில் ஒரு பாடலுக்கு தோன்றினார் சல்மான்.

ஒரே படத்தில்...

ஒரே படத்தில்...

இந்நிலையில் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார், தயாரிப்பாளரும் இயக்குனருமான சஞ்சய் லீலா பன்சாலி. இதை தயாரிப்பாளர் நிகில் திவிவேதி உறுதிப்படுத்தியுள்ளார்.

கதையில் மாற்றம்

கதையில் மாற்றம்

'ஆமா. உண்மைதான். சேர்ந்து நடிக்க சல்மானும் ஷாரூக்கும் ஒப்புக்கொண்டுள்ளனர். கதையில் சில மாற்றங்களை செய்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி. அது சரியானதும் படம் தொடங்கும் என்று கூறியுள்ளார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இரண்டு சூப்பர் ஸ்டார்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்தால், அது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும். அதனால் இந்த படம் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

விஜய்- அஜித்

விஜய்- அஜித்

இந்தியில், இது ஓகே ஆகிவிட்டது. இதே போல தமிழிலும் விஜய் -அஜித் இருவரும் சேர்ந்து நடித்தால், மோதிக்கொள்ளும் ரசிகர்கள் ஒன்றாகக் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யும் அஜித்தும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படம் 1995 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X