»   »  தனுஷுக்கு வந்த திடீர் ஆசை: நிறைவேற்றி வைப்பாரா அஜீத்?

தனுஷுக்கு வந்த திடீர் ஆசை: நிறைவேற்றி வைப்பாரா அஜீத்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்துக்காக ஒரு பாடலாவது பாட வேண்டும் என்று தனுஷ் தனது ஆசையை தெரிவித்துள்ளார்.

தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தொடரி படம் வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி ரிலீஸாகிறது. தற்போது தனுஷ் வடசென்னை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து கவுதம் மேனன் இயக்கி வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிலும் கலந்து கொள்கிறார்.

Will Ajith fulfill Dhanush's wish?

தனுஷ் நடிப்பு தவிர பாட்டு எழுதுவது, பாடுவது, படங்களை தயாரிப்பது என்று திரையுலகில் பன்முகத் திறமை கொண்டவராக உள்ளார். இந்நிலையில் தான் தனுஷுக்கு ஒரு ஆசை ஏற்பட்டுள்ளது.

அது என்னவென்றால், அஜீத்துக்காக ஒரு பாடலாவது பாட வேண்டும் என்பது தான். இந்த ஆசை நிச்சயம் அதுவும் விரைவில் நிறைவேறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒரு வேளை 'தல 57' படத்திலேயே பாட தனுஷுக்கு வாய்ப்பு கிடைக்கலாம், யார் கண்டது. உங்களின் ஆசை நிறைவேறட்டும் தனுஷ்.

English summary
Dhanush has expressed his desire to lend his voice for Thala Ajith Kumar.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil