அஜித்தின் 'வலிமை' படத்துக்காக மிரள வைக்கும் ஆக்ஷன் காட்சி... மே மாதம் ஸ்பெயின் செல்கிறதா படக்குழு?
சென்னை: வலிமை படத்தின் ஆக்ஷன் காட்சிகளை படமாக்க, படக்குழு ஸ்பெயின் செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
நடிகர் அஜித் இப்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
'நேர்கொண்ட பார்வை' படத்தை அடுத்து ஹெச்.வினோத் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். நடிகை ஶ்ரீதேவியின் கணவரும் இந்திப் பட தயாரிப்பாளருமான, போனி கபூர் தயாரிக்கிறார்.

ஹூமா குரேஸி
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிப்பதாகக் கூறப்படுகிறது. இவர் ரஜினிகாந்தின் 'காலா' படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. பின்னர் படக்குழு சென்னைத் திரும்பியது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

வில்லன்
இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே நவ்தீப் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இவர் அஜித்துடன் ஏற்கனவே ஏகன் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் 100 படத்தில் அதர்வாவுக்கு வில்லனாக நடித்த ராஜ் ஐயப்பா இதிலும் வில்லனாகிறார் என்றும் கூறப்படுகிறது.

நள்ளிரவு வரை
இந்த படத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஆக்ஷன் காட்சிகளின்போது அஜித்துக்கு காயம் ஏற்பட்டது. அப்போது இயக்குனர் உட்பட பலர் ரெஸ்ட் எடுக்குமாறு கூறியும் மறுத்துவிட்ட அஜித், காயத்துடனேயே நள்ளிரவு வரை ஷூட்டிங்கில் கலந்துகொண்டு முடித்துக் கொடுத்தார் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

ஸ்பெயினில் ஆக்ஷன்
இந்நிலையில், இந்தப் படத்துக்காக இன்னும் இரண்டு மாதங்களில் ஸ்பெயின் செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக பல படங்களின் வெளிநாட்டு ஷெட்யூல் தடைபட்டுள்ள நிலையில், ஏப்ரல் அல்லது மே மாதம் படக்குழு அங்கு செல்ல இருக்கிறதாம். அங்கு சேஸிங் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது


Click it and Unblock the Notifications











