தனி விமானத்தில் வந்த அஜித்.. நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொள்கிறாரா?

சென்னை: நடிகர் அஜித் குமார் தனி விமானத்தின் அருகே ரசிகர் ஒருவருடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் நாளை நடைபெற உள்ள நிலையில், அதில் கலந்து கொள்வார் அஜித் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பலருக்கும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அழைப்பிதழ் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நயன்தாரா திருமணம்

நயன்தாரா திருமணம்

சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் அடுத்ததாக விஜய்சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கினார். அந்த படத்தில் இருந்தே இருவரும் காதலிக்கத் தொடங்கிய நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 9ம் தேதி 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

அஜித்துக்கு அழைப்பு

அஜித்துக்கு அழைப்பு

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ள நடிகர் அஜித்துக்கு இந்த திருமணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் என நயன்தாராவுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள நடிகர் அஜித் நிச்சயம் திருமணத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனி விமானம்

தனி விமானம்

இந்நிலையில், தனி விமானம் மூலம் ஹைதராபாத்தில் இருந்து நடிகர் அஜித் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், சமூக வலைதளங்களில் ரசிகர் ஒருவருடன் தனி விமானத்தின் அருகே நடிகர் அஜித் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றும் டிரெண்டாகி வருகிறது. இதன்மூலம் நாளை நயன்தாரா திருமணத்தில் அஜித் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதி திருமணத்துக்கு அழைப்பு

ஆதி திருமணத்துக்கு அழைப்பு

சமீபத்தில் நடிகை நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதியின் திருமணம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர் அஜித்தை நேரில் சென்று திருமணத்துக்கு அழைப்பு விடுத்த புகைப்படத்தையும் நடிகர் ஆதி வெளியிட்டு இருந்தார். ஆனால், நடிகர் அஜித் அந்த திருமணத்தில் கலந்து கொண்டது போல எந்த ஒரு தகவலும் இல்லை.

Recommended Video

எந்த தாயும் தன் குழந்தைக்கு ஆபத்துனா ... | Nayanthara | O2 Press Meet *Kollywood | Filmibeat
வருவாரா வரமாட்டாரா

வருவாரா வரமாட்டாரா

பிரைவேட் திருமணம், ஏகப்பட்ட கண்டிஷன், டைட் செக்யூரிட்டி என பல அடுக்கு பாதுகாப்புகள் மற்றும் நெட்பிளிக்ஸுக்கான படப்பிடிப்பு என ஏகப்பட்ட பிசினஸ் விஷயங்களும் இந்த திருமணத்தில் உள்ள நிலையில், நடிகர் அஜித் வருவாரா? மாட்டாரா? என்கிற கேள்வியும் சமூக வலைதளங்களில் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X