போனி கபூரின் ஆசையை நிறைவேற்றி வைப்பாரா அஜித்?
Recommended Video

சென்னை: தயாரிப்பாளர் போனி கபூரின் ஆசையை நிறைவேற்றி வைப்பாரா அஜித் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அஜித்தை வைத்து சமூக அக்கறை கொண்ட படத்தை தனது கணவர் போனி கபூர் தயாரிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி ஆசைப்பட்டார். அந்த ஆசை நிறைவேறுவதற்குள் அவர் எதிர்பாரா விதமாக இறந்துவிட்டார்.
ஸ்ரீதேவியின் ஆசையை போனி கபூர் நிறைவேற்றி வைத்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை
நேர்கொண்ட பார்வை படம் மூலம் ஸ்ரீதேவியின் ஆசையை போனி கபூர் நிறைவேற்றியுள்ளார். மேலும் அஜித்தை வைத்து மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கிறார் அவர். இந்நிலையில் போனி கபூருக்கு வேறு ஆசை ஏற்பட்டுள்ளது.

ஹீரோ
அஜித்தை பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகம் செய்ய விரும்புகிறார் போனி கபூர். 3 ஆக்ஷன் ஸ்க்ரிப்டுகளுடன் அவர் காத்திருக்கிறார். ஸ்ரீதேவியின் ஆசைக்காக போனி கபூர் தயாரிப்பில் நடித்த அஜித் தற்போது அவரின் விருப்பத்திற்காக பாலிவுட் செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அசோகா
அஜித் ஏற்கனவே அசோகா என்கிற இந்தி படத்தில் நடித்திருந்தாலும் அதில் அவர் ஹீரோ இல்லை. இந்நிலையில் அவர் போனி கபூருக்கு ஓகே சொல்லி ஆக்ஷன் ஹீரோவாக நடிப்பாரா?. அஜித் போனி கபூர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதால் இந்தி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி அஜித் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். போனி கபூருக்கும் அஜித் என்றால் மிகவும் பிடிக்கும். நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்து இம்பிரஸ் ஆன போனி அஜித்தை பாலிவுட் அழைத்துச் செல்ல விரும்புவதில் தப்பு இல்லையே.


Click it and Unblock the Notifications











