அஜித், விஜய் ரசிகர்களே, பொள்ளாச்சி பெண்களுக்காக இதை செய்வீர்களா?
சென்னை: பொள்ளாச்சி பயங்கரம் குறித்து தேசிய, சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க வைக்க அஜித், விஜய் ரசிகர்களால் நிச்சயம் முடியும்.
பொள்ளாச்சியில் 200 அப்பாவி பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த கும்பலில் வெறும் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் குறித்து தேசிய, சர்வதேச ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை.
ரஜினிகாந்த் ட்விட்டரில் கணக்கு துவங்கியதை பெரிய விஷயமாக நாள் முழுவதும் தெரிவித்த தேசிய ஊடகங்கள் பொள்ளாச்சி விவகாரம் குறித்து அமைதி காப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய்
அஜித், விஜய் ரசிகர்கள் அடிக்கடி ட்விட்டரில் மோதிக் கொள்கிறார்கள். அவர்கள் சண்டை போட உருவாக்கும் ஹேஷ்டேகுகள் உலக அளவில் டிரெண்டாவது உண்டு. அப்படி டிரெண்டாகும் ஹேஷ்டேகுகளுக்கு அர்த்தம் புரியாமல் வெளிநாட்டவர்கள் அர்த்தம் கேட்டு ட்வீட்டிய சம்பவம் எல்லாம் நடந்துள்ளது.

ட்விட்டர்
அஜித், விஜய் ரசிகர்களால் ஹேஷ்டேகுகளை உலக அளவில் எளிதில் டிரெண்டாக்க முடியும். அவர்கள் பொள்ளாச்சி பயங்கரம் குறித்து ஹேஷ்டேகுகளை உலக அளவில் டிரெண்டாக்க விட்டால் பேருதவியாக இருக்கும்.

ஒற்றுமை
அஜித், விஜய் ரசிகர்களுக்கு இடையே ஆகாது தான். ஆனால் நல்ல விஷயத்திற்காக அவர்கள் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். இந்த நல்ல விஷயத்திற்காக அவர்கள் ஒன்று சேர வேண்டும்.

பிரபலம்
ஒரேயொரு ட்வீட் போட்டு உலக மீடியாக்களின் கவனத்தை ஈர்க்கும் திறன் கொண்ட பிரபலத்திற்கு பொள்ளாச்சி பயங்கரம் குறித்து ட்வீட் செய்ய மனம் இல்லை போன்று. அஜித், விஜய் ரசிகர்களே ஒன்று சேர்வீர்களா, பொள்ளாச்சி பெண்களுக்காக ஒன்று சேர்ந்து உலக மீடியாக்களின் கவனத்தை ஈர்ப்பீர்களா?.


Click it and Unblock the Notifications











