ரவுண்டு கட்டும் படங்கள்.. சிக்கிக்கொண்ட அஜித்குமார்.. இனி என்ன செய்யப்போகிறார்?

சென்னை: ஏகே 62 படத்தின் இயக்குநர் யார் என்ற கவலையே அஜித் ரசிகர்களுக்கு தீராத நிலையில் அவர்களை தற்போது இன்னொரு கவலை ஆட்கொண்டிருக்கிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் வரிசையாக மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார் அஜித். முதல் இரண்டு படங்கள் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில் துணிவு படம் முதல் இரண்டு படங்களைவிட பெட்டர் என்ற நிலையிலேயே நின்றுகொண்டது. இருப்பினும் வங்கி சார்ந்த விஷயங்களை வினோத் தனது பாணியில் கொடுத்திருந்தது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து தனது 62ஆவது படத்தில் நடிக்க லைகா நிறுவனத்திடம் கமிட்டானார் அஜித்.

விக்னேஷ் சிவனால் ஏகே 62க்கு வந்த சோதனை

விக்னேஷ் சிவனால் ஏகே 62க்கு வந்த சோதனை

அந்தப் படத்தின் இயக்குநராக விக்னேஷ் சிவன் அறிவிக்கப்பட்டார். அஜித்துக்குரிய கதையை விக்னேஷ் சிவன் தயார் செய்துவிடுவாரா என்ற சந்தேகம் பலரிடம் இருந்தது. ஆனால், விக்கி சொன்ன ஒன் லைன் அஜித்திற்கு பிடித்துவிட்டதாகவும் ஷூட்டிங் தொடங்கப்படவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் முழு கதையையும் கேட்ட அஜித்தும், லைகாவும் இது நமக்கு செட் ஆகாது என கூறி விக்னேஷ் சிவனை வெளியேற்றினர்.

ஏகே 62க்கு யார்தான்ப்பா இயக்குநர்; குழப்பத்தில் ரசிகர்கள்

ஏகே 62க்கு யார்தான்ப்பா இயக்குநர்; குழப்பத்தில் ரசிகர்கள்

விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்ட பிறகு ஏகே 62 படத்தின் இயக்குநர் என மகிழ் திருமேனி, விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. இந்த ரேஸில் மகிழ் திருமேனி ஏறக்குறைய வென்றுவிட்டார். அவர் படத்தை இயக்குவார். சர்தார் பட இயக்குநர் மித்ரன் கதை எழுதுவார் என தகவல் தீயாக பரவியது.

ஆனால் மகிழ் திருமேனிக்கு அஜித் 4 மாதங்கள் மட்டுமே டைம் கொடுத்ததாகவும் அதனால் மகிழ்ச்சி இழந்த மகிழ் படத்திலிருந்து வெளியேறிவிட்டார் எனவும் கூறப்பட்டது. இருப்பினும் அது பெரும்பாலும் உண்மை இல்லை என்றும், மகிழ்தான் அஜித் 62ன் இயக்குநர் எனவும் கூறப்படுகிறது.

தீபாவளிக்கு ரிலீஸ் என்பதில் உறுதியாக இருக்கும் அஜித்

தீபாவளிக்கு ரிலீஸ் என்பதில் உறுதியாக இருக்கும் அஜித்

இதற்கிடையே தனது 62ஆவது படத்தை இந்த வருட தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதில் அஜித் மும்முரமாக இருக்கிறாராம். பண்டிகை தினங்களில் வெளியானால் வசூலில் எந்தக் குறையும் இருக்காது என்பதால்தான் அவர் இந்த முடிவில் கறாராக இருப்பதாக கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ரவுண்டு கட்டும் படங்கள்; சமாளிப்பாரா அஜித்?

ரவுண்டு கட்டும் படங்கள்; சமாளிப்பாரா அஜித்?

தீபாவளிக்கு படம் வெளியாவதில் சிக்கல் எதுவும் இல்லை. ஆனால் சமீபத்தில் பொங்கல் பண்டிகைக்கு வாரிசுடன் களமிறங்கியது துணிவு. அந்த க்ளாஷில் கதை ரீதியாக வென்றது என்னமோ துணிவுதான். அதேசமயம் வசூல் ரீதியாக துணிவைவிட வாரிசு கொஞ்சம் அதிகம் இருப்பதாக டாக் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும், வசூல் ரீதியாகவும் துணிவுதான் முன்னணியில் இருக்கிறது எனவும் சிலர் பேசுகின்றனர்.

இந்தச் சூழலில் இந்த வருட தீபாவளி ரிலீஸுக்கு ரஜினி நடிக்கும் ஜெயிலர், கமல் நடிக்கும் இந்தியன் 2, சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் என ரவுண்டு கட்டி நிற்கின்றன. இப்படி பல படங்கள் இருக்கும் நிலையில் ஏகே 62 வந்தால் வென்றுவிடுமா என்ற சந்தேகத்தை கோலிவுட்டில் சிலர் எழுப்புகின்றனர்.

அஜித்தால் சமாளிக்க முடியுமா என்ற கேள்விக்கு காரணம் என்ன?

அஜித்தால் சமாளிக்க முடியுமா என்ற கேள்விக்கு காரணம் என்ன?

ஏனெனில் ஏகே 62 படத்துக்கு இயக்குநரே இன்னும் முடிவாகாமல் இருக்கும்போது இனி ஒரு இயக்குநரை பிடித்து; அவர் இனி ஒன்லைனை டெவலப் செய்து, எந்த விதத்திலும் சோடை போகாத திரைக்கதை அமைத்து; பக்காவாக படமாக்கினால் மட்டுமே தீபாவளி ரேஸில் அஜித்தால் கலந்துகொள்ள முடியும்.

அப்படி இல்லாதபட்சத்தில் ஒன்று தீபாவளி ரேஸிலிருந்து விலக வேண்டும்; இல்லை தீபாவளி ரேஸில் அரைகுறையாக இறங்கி தோல்வியடைய வேண்டும். அஜித் இனி என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் திரை ஆர்வலர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X