பொங்கல் போட்டிக்கு வாய்ப்பே இல்லையாம்.. அப்போ ஏகே61 ரிலீஸ் அந்த தேதியில் தானா?

சென்னை: இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் ஏகே61 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், படம் திட்டமிட்டப்படி தீபாவளிக்கு வெளியாவதில் சிக்கல் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தீபாவளிக்கு மட்டுமின்றி இந்த ஆண்டே படம் வெளியாகாது என்றும் அடுத்த ஆண்டுக்குத் தான் அந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றன.

திடீரென கிளைமேக்ஸ் மற்றும் கெட்டப் சேஞ்ச் உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட மாறுதல்கள் தான் இதற்கு காரணம் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

டூர் கிளம்பிய அஜித்

டூர் கிளம்பிய அஜித்

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான வலிமை படமே பல முறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுத் தான் வெளியானது. இந்நிலையில், ஏகே61 படத்தின் ரிலீசும் கடைசி நேரத்தில் தள்ளிப்போகும் நிலை உருவாகி உள்ளது என நெருங்கிய வட்டாரங்கள் உறுதியாகவே தெரிவித்து வருகின்றன. அதற்கு ஏற்றவாறு நடிகர் அஜித்தும் இங்கிலாந்து, ஐரோப்பா என தனிமையில் சுற்றுலாவை மேற்கொண்டு வருகிறார்.

கிளைமேக்ஸ் மாற்றம்

கிளைமேக்ஸ் மாற்றம்

ஏகே61 படத்தின் படப்பிடிப்பை திடீரென நிறுத்தி விட்டு வெளிநாட்டுக்கு அஜித் கிளம்பி செல்ல பல காரணங்களும் வதந்திகளும் சமூக வலைதளங்களில் கிளம்பி உள்ளன. இயக்குநருக்கும் அஜித்துக்கும் பிரச்சனை என்றும், முன்னதாக கூறப்பட்ட கிளைமேக்ஸை அஜித் மாற்ற சொல்லிவிட்டார் என்றும், அஜித்தின் கெட்டப்பே மாற்றப்பட்டு நடிக்க உள்ளார் அதற்காகத்தான் இந்த காலதாமதம் என பல காரணங்கள் கூறுகின்றனர். படக்குழுவே உண்மையான காரணத்தைக் கூறினால் தான் உண்மை வெளிப்படும்.

தீபாவளியும் இல்லை டிசம்பரும் இல்லை

தீபாவளியும் இல்லை டிசம்பரும் இல்லை

இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித் படம் வெளியாகாது என்பதை அறிந்து கொண்டு தான் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் உள்ளிட்ட படங்கள் தீபாவளி பண்டிகையை பிடித்துள்ளதாக கூறுகின்றனர். தீபாவளிக்கு வெளியாகாத பட்சத்தில் டிசம்பருக்கும் படம் தள்ளிப் போகாது என்றும், நவம்பர் வரையில் ஷூட்டிங்கே நடக்கும் என்கின்றனர்.

பொங்கலுக்கு வாரிசு

பொங்கலுக்கு வாரிசு

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் பொங்கல் ரிலீஸ் என்பதை சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்கிலும் அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவித்து விட்டார். இந்நிலையில், பொங்கலுக்கு அஜித்தின் ஏகே61 படம் கண்டிப்பாக போட்டி போடாது என்றும் விநியோகஸ்தர்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள் என்றும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

அந்த தேதி தானா

அந்த தேதி தானா

பொங்கலுக்கு நடிகர் விஜய்யுடன் அஜித்தின் ஏகே61 மோதவில்லை என்றால், நிச்சயமாக குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ம் தேதி (வியாழக்கிழமை) படம் வெளியாக வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். மேலும், இந்த முறை ஏகே61 படத்தை பான் இந்தியா படமாகவும் கொண்டு செல்லவும் பல திட்டங்களை தயாரிப்பாளர் போனி கபூர் செய்து வருவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X