சுஷாந்த் மரணம் எதிரொலி.. ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இருந்து நீக்கப்படுகிறாரா ஆலியா பட்?

சென்னை: ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இருந்து நடிகை ஆலியா பட் நீக்கப்படுவதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

Recommended Video

Rajamouli படத்தில் இருந்து நீக்கப்படுகிறாரா Alia Bhatt?

பாகுபலி படத்தைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஆர்.ஆர்.ஆர்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது.

தமிழில்

தமிழில்

தமிழில் இந்த படம் இரத்தம் ரணம் ரெளத்திரம் என்ற தலைப்பில் வெளியாகிறது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி மற்றும் சில ஹாலிவுட் நடிகர்களுடன் மிக பிரம்மாண்டமாக இந்த படம் உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன கதை

என்ன கதை

சரித்திர கதையாக பாகுபலி படத்தை இயக்கிய ராஜமெளலி, அல்லூரி சீதாராம ராஜு எனும் சுதந்திர போராட்ட வீரரின் கதையை ஆர்.ஆர்.ஆர் படமாக எடுத்து வருகிறார். அவரும் கொமரம் பீமும் இணைந்து இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்காக போராடிய கதையை இயக்கி வருகிறார் ராஜமெளலி.

சமுத்திரகனிக்கு முக்கியத்துவம்

சமுத்திரகனிக்கு முக்கியத்துவம்

பாகுபலியில் கட்டப்பா கதாபாத்திரம் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததோ, அதே அளவுக்கு இந்த படத்தில் நடிகர் சமுத்திரகனியின் கதாபாத்திரம் பேசப்படும் என கூறப்படுகிறது. அவருக்கு சுமார் 2 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகின.

ஆலியா பட் நீக்கம்

ஆலியா பட் நீக்கம்

பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கு, நெப்போடிஸம் தான் காரணம் என ரசிகர்கள் கொந்தளித்து வரும் நிலையில், ஆலியா பட்டை நடிக்க வைத்தால், ஆர்.ஆர்.ஆர். படத்தின் வசூல் பாதிக்கும் என்ற கருத்து பரவி வரும் நிலையில், ராஜமெளலியின் படத்தில் இருந்து ஆலியா பட் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

ஏற்கனவே

ஏற்கனவே

சுஷாந்த் சிங் மரணம் பிரச்சனை எழுவதற்கு முன்னதாக பிரம்மாஸ்த்ரா, கங்குபாய் காத்தியாவதி, சதாக் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதால், கால்ஷீட் காரணமாக ஆலியா பட் நடிக்க மாட்டார் என்ற வதந்தி வைரலான நிலையில், இயக்குநர் ராஜமெளலி அந்த வதந்திகளை உடனடியாக மறுத்து, ஆலியா பட், இந்த படத்தின் இன்னொரு தூண் எனக் கூறியிருந்தார்.

ஏன் ஆலியா பட்

ஏன் ஆலியா பட்

நெப்போடிசம் பிரச்சனை காரணமாக பல பாலிவுட் நடிகர்களை புறக்கணிக்க முடியாத சூழலில், அதிகப்படியாக ஏன் ஆலியா பட்டை டார்கெட் செய்கின்றனர் என்றால், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு ஆலியா பட்டின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான மகேஷ் பட் தான் காரணம் என்பதால், ரசிகர்கள் ஆலியா பட் மீது மிகுந்த வெறுப்புணர்வுடன் இருக்கின்றனர்.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

சமீபத்தில் ஆலியா பட் இன்ஸ்டாகிராமை பின் தொடரும் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்ஃபாலோ செய்து தங்களின் வெறுப்பை காட்டி வருகின்றனர். மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு நீதி வேண்டும் என போராடி வரும் அவர்கள், ஆலியா பட், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட வாரிசு நடிகர்களின் படங்களையும் புறக்கணிக்கும் முடிவிலும் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X