‘வெல்கம் பேக்’ மூலம் மீண்டும் இணை சேருவார்களா அமிதாப்-ரேகா?
மும்பை: ஒரு காலத்தில் பாலிவுட்டை ஈர்த்த அமிதாப் பச்சனும், ரேகாவும் மீண்டும் ஜோடி சேரப் போவதாக ஒரு தகவல் கூறுகிறது.
2007ம் ஆண்டு வெளியான வெல்கம் படத்தை ரீமேக் செய்யும் திட்டத்தி்ல இருக்கிறாராம் இயக்குநர் அனீஸ் பஸ்மி.
இதற்காக அமிதாப்பையும், ரேகாவையும் சந்தித்துப் பேசியுள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

வெல்கம் பேக்....
வெல்கம் பேக் என்று தனது ரீமேக் படத்திற்குப் பெயர் வைத்துள்ளார் அனீஸ். இப்படத்தில் அமிதாப்பும், ரேகாவும் இணைந்து நடிக்க அவர் விரும்புகிறார்.

நடிக்கச் சம்மதமா....?
இந்தப் படத்தை பிரோஸ் நாடியவாலா தயாரிக்கிறார். அவரும், அனீஸும் இணைந்து அமிதாப்பையும், ரேகாவையும் சந்தித்துப் பேசியுள்ளனராம்.

தாத்தா அமிதாப் தாதாவாகிறார்....
அமிதாப் பச்சன் ஆர்டிஎக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அணுகியுள்ளனர். இது ஒரு தாதா வேடம். இந்த வேடத்தை மறைந்த பெரோஸ் கான் செய்திருந்தார்.

பணக்காரப்பெண்...
ரேகாவுக்கு பேஷியனிஸ்டா என்ற பணக்காரப் பெண் வேடமாம்.

விரைவில் முடிவு தெரியும்....
இதுகுறித்து அனீஸ் கூறுகையில், எதுவும் இன்னும் முடிவாகவில்லை. பேச்சு அளவில் உள்ளது. ரேகா தவிர வேறு சில பழம்பெரும் நடிகைகள் சிலரையும் அணுகியுள்ளோம். முடிவானதும் தெரிவிக்கப்படும் என்றார்.

ரேகா நல்ல நகைச்சுவை நடிகை....
அவர் மேலும் கூறுகையில், நான் ரேகாஜியின் பரம விசிறி. அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். இது ஒரு காமெடிப் படம். இதற்கு ரேகாதான் பொருத்தமாக இருப்பார் என்பது எனது கருத்து. அவருக்கு அருமையான நகைச்சுவை உணர்வு உண்டு என்றார்.

சமீபத்தில் சந்திக்கவேயில்லை....
அமிதாப்பும், ரேகாவும் இணைந்து திரையில் வெற்றிகரமான ஜோடியாக திகழ்ந்தவர்கள். நிஜ வாழ்க்கையிலும் கூட இருவரும் நெருக்கமாக பழகினர் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால் கடந்த பல வருடங்களாக இருவரும் நேரில் பார்த்துக் கொள்வது கூட கிடையாது.

சில்சிலாதான் கடைசி....
இருவரும் இணைந்து நடித்த முதல் படம் தோ அஞ்சானே. பின்னர் முக்காதர் கா சிக்கந்தர், மிஸ்டர் நட்வர்லால், சுஹாக், சில்சிலா ஆகிய படங்களில் நடித்தனர். சில்சிலாவுக்குப் பிறகு இருவரும் இணையவில்லை.

புதிய வரவு....
வெல்கம் படத்தில் ஏற்கனவே தாங்கள் நடித்த பாத்திரங்களிலேயே வெல்கம் பேக் படத்திலும் நானா படேகர் மற்றும் அனில் கபூர் நடிக்கவுள்ளனர். அதேசமயம், படத்தில் புதிய வரவாக ஜான் ஆப்ரகாம், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











