அனிருத்னா அந்த பிரபலத்துக்கு அவ்வளவு இஷ்டம்.. ஹீரோவா நடிச்சா.. முதல் படம் அவர் தான் பண்ணுவாராம்!
சென்னை: தமிழ் சினிமாவில் பிசி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், இன்ஸ்டாவில் சமீபத்தில் பதிவிட்ட செம சூப்பரான போட்டோவுக்கு லைக்குகள் குவிகின்றன.
இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி, ஜி.வி. பிரகாஷ், ஹிப் ஹாப் ஆதி எல்லாம் ஹீரோவாக கலக்கி வரும் நிலையில், அனிருத்தையும் ஹீரோவாக பார்க்க பல பிரபலங்களும் ஆசைப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அனிருத்தின் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படத்தை பார்த்த பிரபல நடிகர், நீங்க ஹீரோவா நடிச்சா நான் தான் அந்த படத்தை தயாரிப்பேன் எனக் கூறியுள்ளார்.

நடிகரின் மகன்
ஆனந்த கண்ணீர், வரவு நல்ல உறவு, படையப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் ரவி ராகவேந்திராவின் மகனும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் உறவினருமான அனிருத், தனுஷின் ‘3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என பல முன்னணி ஹீரோக்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஹேண்ட்ஸம் ராக்ஸ்டார்
மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு பல தரமான பாடல்களை போட்டு அசத்தியுள்ள ராக்ஸ்டார் அனிருத், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூலர்ஸ் அணிந்தபடி ஆஷ் மற்றும் ஆரஞ்சு நிற டி-சர்ட்டில் செம மாஸாக அப்படியே பாலிவுட் ஹீரோ போல போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.

என் படம் தான் முதல் படம்
அனிருத்தின் இந்த ஹேண்ட்ஸமான புகைப்படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், "சார் எப்போ நாளும் சரி, என்னைக்கி நாளும் சரி, நீங்க ஹீரோவா நடிக்கிற ஃபர்ஸ்ட் படம் புரொடியூசர் நான் தான்" என கமெண்ட் போட்டுள்ளார். கனா, வாழ், டாக்டர் உள்ளிட்ட படங்களை சிவகார்த்திகேயன் தனது பேனரில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அப்போ நான் தான் இயக்குவேன்
அனிருத் ஹீரோவாக நடித்தால் அந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், அனிருத் இசையில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தை இயக்கி வரும் நெல்சன், அப்போ நான் தான் அந்த படத்தை இயக்குவேன் என்று இப்போதே அவரும் சீட் போட்டு வைத்துள்ளார். இவங்களுக்காவாவது அனி ப்ரோ சீக்கிரம் ஹீரோவா ஆகணும் என ரசிகர்களும் கோரிக்கை.

ஆல்பம் பாடல்களில்
சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, ரெமோ, வேலைக்காரன் மற்றும் டாக்டர் என பல படங்களுக்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் அனிருத், ரெமோ பட பாடலின் கவர் சாங் ஒன்றில் நாயகனாக நடித்து அசத்தியிருப்பார். மேலும், பல ஆல்பம் பாடல்களிலும், வெளிநாட்டு கச்சேரிகளிலும் அனிருத்தின் பெர்ஃபார்மன்ஸுக்கு ரசிகர்கள் அதிகம்.

சியான் 60
உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2, தளபதி விஜய்யின் மாஸ்டர் என பிசியாக இருக்கும் இசையமைப்பாளர் அனிருத், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் த்ருவ் விக்ரம் நடிப்பில் உருவாக உள்ள கேங்ஸ்டர் படமான ‘சியான் 60' படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











