twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அண்ணா 'துரை' விஐய் ஆண்டனிக்கு வெற்றியை தருவாரா?

    By Shankar
    |

    Recommended Video

    அண்ணா 'துரை' விஐய் ஆண்டனிக்கு வெற்றியை தருவாரா?- வீடியோ

    சென்னை : ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் சீனிவாசன் இயக்கியிருக்கும் 'அண்ணாதுரை' இன்று ரிலீஸ் ஆகிறது.

    சவுண்ட் என்ஜினியராக தமிழ் சினிமாவில் தன் பயணத்தை தொடங்கிய விஐய் ஆண்டனி வெற்றிகரமான இசையமைப்பாளராக வளர்ந்த பின் நடிகராக அறிமுகமான படம் "நான் "தன் முதல் பட தலைப்பிலேயே நான் என அகங்காரத்தோடு நாயகனாக தன்னை அடையாளப்படுத்தி கொண்டு எதிர்பாராத சுமாரான வெற்றியை பெற்றார் விஜய் ஆண்டனி.

    Will Annadurai give victory to Vijay Antony?

    இதுவரை 6 படங்களில் நாயகனாக நடித்திருக்கும் இவர் தன் படங்களுக்கு எதிர்மறையாகவே பெயர்வைத்து மக்களிடம் எளிதில் சென்றடையும் யுக்தியை பயன் படுத்தி வருகிறார் விஐய் ஆண்டனி.

    இவர்நடிப்பில் நான் (2012) சலீம் (2014) இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் (2015) எமன், சைத்தான் (2016) வெளியான இப்படங்களில் பிச்சைகாரன் தமிழ் , தெலுங்கில் மிகப் பெரும் வெற்றி பெற்றதன் மூலம் தமிழ் சினிமாவில் வியாபார முக்கியத்துவம் உள்ள நாயகனாக ஆனார் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் படத்திற்கு பின் வெளிவந்த எமன், சைத்தான் இரு படங்களும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் நஷ்டத்தை ஏற்படுத்தின. அதனால்
    அண்ணாத்துரை வெற்றி விஐய் ஆண்டனிக்கு அவசியமாகியுள்ளது.

    இவர் நடித்து வந்துள்ள படங்களில் பிச்சைகாரன் மட்டுமே தமிழகத்தில் 8 கோடி வசூல் செய்த ஒரே படம். அதே அளவு வெற்றியை பெறும் நோக்கில் 'அண்ணாதுரை' படத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. தமிழகத்தின் ஒப்பற்ற அரசியல்வாதியாக வளர்ந்து தமிழக முதல்வராகி மறைந்தவர் சி.என்.அண்ணாதுரை.

    தமிழகத்தில் உள்ள திராவிட இயக்கங்கள் தங்களை முன்னிலை படுத்திக் கொள்ளவும், அரசியல் வியாபாரத்திற்கும் அண்ணாதுரை பெயரை பயன்படுத்தி வருகின்றன.

    சினிமா வெற்றிக்கு அப்பெயரை பயன்படுத்த தைரியம் வேண்டும். சண்டியர் என பெயர் வைத்ததற்கே தமிழகத்தில் போராட்டம் வெடித்தது விருமாண்டி என பெயர் மாற்றினார் கமல்.

    தமிழகத்தின் அடையாளமாக அறியப்படும் அண்ணாதுரை பெயர் வியாபார யுக்திக்காக தமிழ் சினிமாவில் பயன் படுத்தப்பட்டிருப்பதை திராவிட இயக்கங்கள் கவனிக்கத் தவறிவிட்டன. இதனை விஜய் ஆண்டனி ஒரு வியாபாரியாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

    வசதி படைத்தவர்களின் செக்ஸ் வாழ்க்கையை மையப் படுத்தி சுசி கணேசன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் திருட்டு பயலே.
    அதனுடைய இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு இன்று வெளியாகிறது.

    அதனுடன் நேரடி மோதலில் 300க்கும் மேற்பட்ட தியேட் டர்களில் "அண்ணாதுரை" ரீலீஸ் ஆகிறது. சினிமா வட்டாரத்தில் மட்டுமல்ல ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது அண்ணாதுரை.

    தமிழகத்தில் சுமார் 10 கோடி வரை வியாபாரம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இப்படத்தின் வெற்றி இன்றியமையாதது விஜய் ஆண்டனிக்கு.

    தமிழகத்தில் கருணாநிதி, எம்ஜிஆர் இருவரது வெற்றிக்கும் அண்ணா பெயர் உதவியிருக்கிறது. நடிகர் விஜய் ஆண்டணிக்கு அண்ணாதுரை உதவுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    Vijay Antony's 'Annadurai' is produced by 'Radhika Sarathkumar's AR Studios and Fathima Vijay Antony's' Vijay Antony Film Corporation'. This film will be released today, directed by debut director Srinivasan .
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X