இந்த தீபாவளிக்கு தலைவர் vs ஆண்டவர் ஆ!?.. எதிர்பார்ப்பில் தமிழ் சினிமா
சென்னை: சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் தயாராகவுள்ள திரைப்படம் விக்ரம்.
இந்த இரண்டு படமும் இந்த தீபாவளிக்கு திரைக்கு வரும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அது சாதகமாக முடியவும் வாய்ப்புள்ளது.

கொரோனா தொற்று
நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த டிசம்பரில் ஹைதராபாத்தில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், அங்கு ஏற்பட்ட கொரோனா பரவலால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

தீபாவளி வெளியீடு
இதையடுத்து ரஜினியின் உடல் நலம் குணமடைந்த பின்னர் படத்தை குறித்த சில தகவல்கள் வெளிவந்தன. படத்தின் முக்கிய காட்சிகள் வட மாநிலங்களில் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்தன. அண்ணாத்த படத்தை தீபாவளிக்கு வெளியிடவுள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதியளித்தது.

இரண்டு அப்டேட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சட்ட மன்ற தேர்தல் காரணமாக நிலுவையில் இருந்தது. சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் இந்த படத்தின் இரண்டு அப்டேட்டாக நேற்று, விக்ரம் படத்தில் பகத் பாசில் நடிக்கவுள்ளதும், படத்தின் பணிகளை தொடங்கிய லோகேஷ் & கமல் ஆகியோரின் புகைப்படமும் வெளியானது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்நிலையில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் முடிவடைந்து தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திட்டமிட்ட படி அனைத்தும் சரியாக நடந்தால் இந்த தீபாவளிக்கு அண்ணாத்த & விக்ரம் ஒன்றாக வெளிவரும். 16 வருடம் கழித்து ரஜினி, கமல் ஆகியோரின் படம் ஒரே தேதியில் ரிலிஸ் ஆகும் என்பதும் கூடுதல் சிறப்பு.


Click it and Unblock the Notifications











