நாமினேஷனில் வந்ததும் இன்னாம்மா நடிக்கிறாங்க.. அழுது புலம்பும் அர்ச்சனா.. வெளியேற்றப்படுவாரா?

சென்னை: எவிக்‌ஷனுக்கு நாமினேஷன் ஆனால், மட்டுமே அர்ச்சனா மற்றும் அனிதா சம்பத்தின் நடிப்பு உச்சகட்டத்தில் இருக்கும்.

இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ள அர்ச்சனா இன்றைய மூன்றாவது புரமோவில் அழுது புலம்புவதை பார்த்து ரசிகர்கள் யாருமே அனுதாபப்படவில்லை.

அன்பு கேங் என சொல்லிக் கொண்டு சுற்றிய சோம் மற்றும் ரியோவிடமே இந்த வாரம் சண்டை பிடித்துள்ளார் அர்ச்சனா.

எவிக்‌ஷனுக்கு நாமினேஷன்

எவிக்‌ஷனுக்கு நாமினேஷன்

நாமினேஷன் ஆகவில்லை என்றால், ஜாலியாக இருக்கும் ஹவுஸ்மேட்கள், எவிக்‌ஷன் நாமினேஷுக்கு வரும் வாரத்தில் மட்டுமே தங்களது பங்களிப்பு கொடுக்க வேண்டும் என நினைக்கின்றனர். சில சமயங்களில் நிஷா செய்தது போல ஓவர் டோஸ் ஆகி வெளியேறவும் அது வழி வகுத்துவிடும்.

சோமிடம் சண்டை

சோமிடம் சண்டை

டீமாக விளையாடியவர்களை இதுக்கு மேலும் டீமாக விளையாடவிட்டால், நம்ம காலியாகி விடுவோம் என்பதை புரிந்து கொண்ட பிக் பாஸ் குழு, கோழிப்பண்ணை டாஸ்க் கொடுத்து அர்ச்சனாவின் அன்பு கேங்கையே அவருக்கு எதிராக திருப்பி விட்டுள்ளது. அர்ச்சனாவின் முட்டையை சோம் தான் உடைத்தார் என அவருடன் செம சண்டை போடுகிறார் அர்ச்சனா.

ரியோவையும் விடல

ரியோவையும் விடல

நானும் உங்க முட்டையை தொட்டேன் என ரியோ பேசும் போது அவருடனும் மல்லுக்கு நின்று சண்டை செய்கிறார் அன்பு அர்ச்சனா. போட்டின்னு வந்தா நான் அன்பையும் பார்க்கமாட்டேன் அறிவையும் பயன்படுத்தமாட்டேன் என்கிற ரீதியில் கேம் ஆடுவதால் தான் இந்த பிரச்சனையே!

கன்ஃபெஷன் ரூமில் கதறல்

கன்ஃபெஷன் ரூமில் கதறல்

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில், அன்பை வைத்து விளையாடி ஜெயிக்க நினைத்தேன். ஆனால், அது முடியவில்லை, நான் ஏன் இங்க இருக்கேன், என் வாழ்க்கையிலேயே இதற்கு முன் இப்படி சண்டையே போட்டதில்லை என கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுகிறார் அர்ச்சனா.

அனுதாபமே வரலை

அனுதாபமே வரலை

ஆனால், அர்ச்சனாவின் அழுகை அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்பதற்காக போடும் நடிப்பு அழுகை என்றும், அவரது அழுகையை பார்த்தால் கொஞ்சம் கூட அனுதாபமே வரவில்லை என்றும் ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் புரமோவை பார்த்து விட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த வாரம் நீங்கதான்

இந்த வாரம் நீங்கதான்

இப்படி ஓவராக நடித்து சீன் போடும் அர்ச்சனாவை இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டால், ரியோ மற்றும் சோமசேகர் இப்போ ஆடுவது போலவே சூப்பரான சோலோ கேம் ஆடுவார்கள். அர்ச்சனாவின் அன்பு பிடியில் சிக்கித் தவித்து இத்தனை நாட்கள் அவர்கள் பண்ணிய தவறு இனியும் தொடராது. பிக் பாஸ் ரசிகர்கள் அர்ச்சனாவிற்கு ஓட்டுப் போடாமல் அவரை வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

டம்மி பீஸ்

டம்மி பீஸ்

ஆனாலும், அர்ச்சனாவை விட இன்னமும் பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட டம்மி பீஸ்கள் உள்ளன. அவர்களை வெளியே அனுப்பிய பிறகு தான் அர்ச்சனாவை வெளியே அனுப்புவார்கள் என்றும் சில ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்து அர்ச்சனாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X