கழுத்தில் கத்தி வைக்கும் புள்ளிங்கோ.. மெளனம் கலைப்பாரா அக்கா?
சென்னை: பிகில் படம் வெளியாகும் முன்பு வரை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பயங்கர ஆக்டிவ்வாக இருந்து வந்தார் அர்ச்சனா கல்பாத்தி.
ஆனால், பிகில் படத்தின் ரிலீசுக்கு பிறகு, அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகளவில் தலை காட்டுவதில்லை.
மேலும், பிகில் படத்தின் உண்மையான வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட ரசிகர்கள் கோரிக்கை வைத்தும் அதுகுறித்து எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

அக்கா
தளபதி 63 படம் தொடங்கி, பிகில் ரிலீஸ் வரை பிகில் படத்தின் க்ரியேட்டிவ் ஹெட்டான அர்ச்சனா கல்பாத்தி தான் விஜய் ரசிகர்களுக்கான அத்தனை அப்டேட்டுகளையும் வெளியிட்டு வந்தார். இதனால், முதலில் அர்ச்சுமா என அழைத்து வந்த ரசிகர்கள், பின்னர், அக்கா என பாசத்தோடு அழைத்து, அக்கா எனும் ஹேஷ்டேகையும் டிரெண்ட் செய்தனர்.

வசூல்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் 10 நாட்களை கடந்துள்ள நிலையில், 250 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிகில் திரைப்படம் வெளியிட்ட பல தியேட்டர்களும், பிகில் தங்களுக்கு நல்ல வசூலை கொடுத்துள்ளது என கூறி வருகின்றனர்.

மீண்டும் ஆன்லைன்
கடந்த ஒரு வாரமாக ஆன்லைனில் ஆக்டிவாக இல்லாத அக்கா அர்ச்சனா கல்பாத்தி, மீண்டும் இன்று ட்விட்டரில் பிகில் குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டார். பிகில் படத்தின் தாக்கத்தால், ரியல் கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு ஊக்கம் கிடைத்திருப்பதாக வந்த செய்தியை பகிர்ந்த அர்ச்சனா கல்பாத்தியை மீண்டும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ரியல் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் என்ன என நச்சரிக்கத் தொடங்கியுள்ளனர்.
கழுத்தில் கத்தி
பிகில் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்த அப்டேட்டை கேட்ட ரசிகர்களில், ஒரு ரசிகர், கொஞ்சம் எல்லை மீறி போய், நடிகர் விஜய் கில்லி படத்தில் த்ரிஷாவின் கழுத்தில் வைத்திருக்கும் புகைப்படத்தை மார்ஃப் செய்து அர்ச்சனாவின் கழுத்தில் கத்தி வைத்து பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட்டை கேட்பது போன்று பதிவிட்டுள்ளார். இதற்கு மேலும், அர்ச்சனா கல்பாத்தி மெளனம் கலைத்து ரியல் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











