நண்பேன்டா விஷாலுக்காக நம்பியாராக மாறுவாரா ஆர்யா?
சென்னை: இரும்புத் திரை படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்குமாறு ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
விஷால் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் புதுமுகம் பி.எஸ். மித்ரனின் இயக்கத்தில் இரும்புத் திரை படத்தில் நடிக்க உள்ளார்.

இரும்புத் திரையில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு வரும் 19ம் தேதி துவங்க உள்ளது.
இந்நிலையில் படம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது. இரும்புத் திரையில் விஷாலுக்கு வில்லனாக நடிக்குமாறு அவரது நெருங்கிய நண்பர் ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
முன்னதாக ஆர்யாவும், விஷாலும் சேர்ந்து அவன் இவன் படத்தில் நடித்துள்ளனர். நண்பர்களுக்காக கவுரவத் தோற்றத்தில் வரும் ஆர்யா நண்பேன்டாவுக்காக வில்லன் ஆவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











