சிம்பு-ஹன்சிகாவை அடுத்து ஆர்யா, நயன் காதலை ஒப்புக்கொள்வார்களா?
சென்னை: சிம்புவும், ஹன்சிகாவும் தங்கள் காதலை வெளிப்படையாக ஒத்துக் கொண்டார்கள். அடுத்ததாக ஆர்யாவும், நயன்தாராவும் ஒப்புக்கொள்வார்கள் என்று கோலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.
நயன்தாரா முதலில் சிம்புவை காதலித்தார். வல்லவன் படத்தில் நடித்தபோது அவர்களுக்கு இடையே காதல் தீ பற்றிக்கொண்டது. ஆனால் காதல் தீ எந்த வேகத்தில் பற்றியதோ அதே வேகத்தில் அணைந்து போனது.
இதையடுத்து நயன்தாரா வில்லு படத்தில் நடித்தபோது படத்தின் இயக்குனர் பிரபுதேவாவை காதலித்தார்.

2 வருட காதல் முறிவு
பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே பிரபுதேவாவின் கரங்களை இருக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார் நயன்தாரா. தமிழகத்து பெண்கள் நயனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியபோது கூட கலங்காமல் இருந்தார். இறுதில் அவர்களின் காதல் டணாலானது.

காதலே வேண்டாம்
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு இனி யாரையுமே காதலிக்கப் போவதில்லை என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

ஆர்யாவுடன் என்ன?
பிரபுதேவாவைப் பிரிந்த உடன் நயன்தாராவின் பெயர் ஆர்யாவுடன் சேர்ந்து அடிபடுகிறது. கேட்டால் நாங்கள் நண்பர்கள் என்கிறார்.

எப்பொழுது ஒப்புக் கொள்வார்கள்?
நான் சிம்புவை காதலிக்கவே இல்லை என்று பச்சப்புள்ளையைப் போன்று முகத்தை வைத்துக் கொண்டு அலறினார் ஹன்சிகா. இறுதியில் ஆமாம் நானும் சிம்புவும் லவ் பண்றோம் என்று தெரிவித்தார். சிம்பு, ஹன்சிகா தங்கள் காதலை வெளிப்படையாக ஒப்புக் கொண்டதை போல் ஆர்யாவும், நயனும் வெகு விரைவில் தங்கள் காதலை உலகிற்கு அறிவிப்பார்கள் என்று கோலிவுட் கிசுகிசுக்கிறது.


Click it and Unblock the Notifications











