மறுபடியும் பிக்கப் டிராப் செய்யப் போறீங்களா ஆர்யா?
Recommended Video

சென்னை: எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை பார்க்கும்போது ஒரேயொரு கேள்வி தான் எழுகிறது.
தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி பலருக்கும் பிடித்துள்ளது. ஆர்யா திருமணம் செய்து கொள்ள பெண்ணை தேர்வு செய்யும் நிகழ்ச்சி இது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 16 பெண்களில் ஒருவரை தான் ஆர்யா மணக்கப் போகிறாராம்.

போட்டி
தினமும் ஒரு போட்டி வைக்கிறார்கள். இறுதியில் யார் வெற்றி பெறுகிறாரோ அந்த பெண் தான் ஆர்யா திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்
இறுதிப் போட்டியில் வெல்லும் பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்று ஆர்யாவும் தெரிவித்துள்ளார். ஆனால் இது நம்பும்படியா இருக்கு என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இந்தி
இந்தியில் நடிகைகள் மல்லிகா ஷெராவத், ராக்கி சாவந்த் ஆகியோரை வைத்து சுயம்வர நிகழ்ச்சியை நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற ஆண்களை அந்த இருவரும் திருமணம் செய்யவில்லை.

மல்லிகா ஷெராவத்
மல்லிகா ஷெராவத் நிகழ்ச்சியில் அவரை விட மிகவும் வயது குறைந்த விஜய் சிங் என்பவர் தேர்வானார். ஒப்பந்தப்படி நிகழ்ச்சி முடிந்த ஓராண்டுக்குள் மல்லிகா அவரை திருமணம் செய்யலாம். ஓராண்டு முடிந்துவிட்டால் மல்லிகாவுக்கு விருப்பம் இல்லை எனில் விஜய்யை மணக்க வேண்டாம் என்று இருந்தது. மல்லிகாவும் விஜய்யை திருமணம் செய்யவில்லை.

நடக்குமா?
இந்தியில் மல்லிகா ஷெராவத், ராக்கி சாவந்த் ஆகியோர் செய்ததை தான் ஆர்யாவும் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அகதா மேக்னஸ் ஆபாச படத்தில் நடித்தது தெரிய வந்துள்ளது.

பணம்
போட்டியாளர்கள் பப்ளிசிட்டிகாகவும், நடிகைகள் பணத்திற்காகவும் இந்தி சுயம்வர நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக விமர்சிக்கப்பட்டது. தமிழில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











