விக்ரமுக்காக இவ்வளவு இறங்கி வந்த பாலா 'அதை'யும் செய்ய மாட்டாரா என்ன?
Recommended Video

சென்னை: விக்ரமுக்காக இவ்வளவு இறங்கி வந்த இயக்குனர் பாலா அதையும் செய்வார் என்றே நம்பப்படுகிறது.
தனது மகன் த்ருவை ஹீரோவாக்க முடிவு செய்த விக்ரம் அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு எடுத்தார். தனக்கு ராசியான பாலாவிடமே தனது மகனை ஒப்படைத்துவிட்டார்.
அர்ஜுன் ரெட்டியை பாலா ரீமேக் செய்கிறாரா என்று கோலிவுட்டே வியந்தது.

ரீமேக்
பாலாவுக்கு ரீமேக் எல்லாம் வராது. அவரிடம் அர்ஜுன் ரெட்டியை கொடுத்தால் கதை கந்தல் தான். தனது பாணியில் மாற்றி விக்ரமின் மகனை பைத்தியமாக்கிவிடுவாரே என்று ஆளாளுக்கு பேசினார்கள். பேசியவர்களை எல்லாம் வியக்க வைக்கும் வகையில் உள்ளது வர்மா டீஸர். அர்ஜுன் ரெட்டி படத்தில் உள்ள பெரும்பாலானவற்றை அப்படியே வைத்துள்ளார் பாலா.

த்ருவ்
வர்மா டீஸரை பார்த்தவர்கள் அர்ஜுன் ரெட்டி ட்ரெய்லரை தேடிப் பிடித்து பார்த்து ஒப்பிடுகிறார்கள். அட, நம்ம பாலா கூட நல்லா தான்யா ரீமேக் செய்திருக்கிறார் என்கிறார்கள். டச்சிங்கான படம் மட்டும் எடுப்பவன் தான் இந்த பாலான்னு நினைக்கிறீர்களா, ரீமேக்கும் நல்லாவே செய்வான் என்பது போன்று உள்ளது வர்மா டீஸர்.

கதறல்
பாலாவின் படங்கள் என்றால் கிளைமாக்ஸ் கதறலாக இருக்கும். அர்ஜுன் ரெட்டி படத்திலோ ஹீரோவும், ஹீரோயினும் சேர்ந்து சுபமான கிளைமாக்ஸ். வர்மாவில் அர்ஜுன் ரெட்டி கிளைமாக்ஸையே வைப்பாரா இல்லை ஹீரோ, ஹீரோயினை பிரித்து வைத்து ரசிகர்களை கதற வைப்பாரா பாலா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விக்ரம்
விக்ரமுக்காக தனது கொள்கையை தளர்த்தி ரீமேக்கே செய்துள்ளார் பாலா. அப்படி இருக்கும்போது ஒரு சந்தோஷமான கிளைமாக்ஸ் வைக்க மாட்டாரா என்ன? எவ்வளவோ செய்துவிட்டார் இதை செய்ய மாட்டாராக்கும்?. படத்தை பாலா எப்படி ரீமேக் செய்திருக்கிறார் என்பதை பார்த்துவிடும் ஆர்வம் பலருக்கும் வந்துவிட்டது.


Click it and Unblock the Notifications











