Just In
- 15 min ago
சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?
- 8 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 9 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 11 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
Don't Miss!
- News
Co Win: கோவின் செயலியில் பதிவு செய்தோருக்கே கொரோனா தடுப்பூசி
- Automobiles
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குரூபிசம் பண்ண ரெடி.. என் குரூப்புக்கு வாங்க.. கேமரா முன்பு கூவும் பாலா.. ஆரிக்கு எதிராக சூழ்ச்சி!
சென்னை: ஆரி விளையாடுவது தான் சோலோ கேம் என்றால், தனக்கு அந்த கேம் வேண்டவே வேண்டாம், நான் குரூபிசமே பண்ணி பிழைத்துக் கொள்கிறேன் என பாலா பேசியது ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.
எல்லோரையும் ஆரி தகுதி இல்லை என சொல்வதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கு என்கிற கேள்வியை எழுப்பிய பாலா, ரம்யா பாண்டியன் மற்றும் ஆஜீத்துடன் ஒரு சின்ன குரூப் மீட்டிங் வச்சி ஆரிக்கு எதிராக சூழ்ச்சி செய்தார்.
ஆரி மீது ஏற்கனவே பகையில் இருக்கும் ரம்யா மற்றும் ஆஜீத், பாலாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு ஆரிக்கு எதிராக பேசினர்.
பாலாவுக்கு கிடைத்த சூப்பர் பவர்.. ஷிவானியை சேவ் பண்ணி ஆஜீத்தை வெளியேற்றுவாரா? ட்விஸ்ட் இருக்கு!

பழி வாங்க துடிக்கும் பாலா
ஷிவானியை எப்படியாவது கடைசி வரை காப்பாற்றி விடலாம் என நினைத்து அவருக்கு பெஸ்ட் பர்ஃபார்மர் என பாலா ஓட்டுப் போட்ட நிலையில், ஆரி மற்றும் ஹவுஸ்மேட்கள் போட்ட ஓட்டுக்கள் காரணமாக ஷிவானி, கேபியுடன் சிறைக்கு சென்றார். இதற்கு ஆரி மட்டுமே காரணம் என்பது போல முடிவு செய்து கொண்ட பாலா, ஆரியை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என துடித்துக் கொண்டு இருக்கிறார்.

மட்டம் தட்டுறாரு
பிக் பாஸ் டைட்டிலை தட்டிச் செல்லும் தகுதி தனக்கு மட்டுமே இருப்பது போல ஆரி நடந்து கொள்வது கொஞ்சமும் பிடிக்கவில்லை. ரம்யாவுக்கு தகுதி இல்லை, ஆஜீத்துக்கு இல்லை, பாலாவுக்கு தகுதி இல்லை, ஏன் பிக் பாஸ் வீட்டில் யாருக்கும் தகுதியில்லை. எல்லா தகுதியும் அவருக்கு மட்டும் தான் இருக்கு என்பது போல பேசுவது எரிச்சலை கிளப்புதுன்னு பாலா நல்லாவே ரம்யாவையும் ஆஜீத்தையும் கொம்பு சீவி விட்டார்.

நக்கலடித்த ரம்யா
எங்க தப்பு நடக்குது, எதுல குத்தம் கண்டு பிடிக்கலாம் என ஆரி அலைகிறார் என அவரை போலவே இமிடேட் செய்து நடித்துக் காட்டிய ரம்யா பாண்டியன், பாலா மற்றும் ஆஜீத்துடன் இணைந்து கொண்டு ஆரி பற்றி அவதூறாக பேசி, நக்கலடித்து சிரித்ததை பார்த்த ரசிகர்கள் தாய் கிழவி பயமா இருக்குமா என மீம் போடவே வைத்து விட்டது.

ஆஜீத்துக்கு எகத்தாளம்
70 நாட்கள் என்ன பண்ணீங்க ஆஜீத் என பிக் பாஸ் கூப்பிட்டு வைத்து குமுறிய போது ஆளை விடுங்க பிக் பாஸ் என தெறித்து ஓடி வந்த ஆஜீத், இப்போ 70 நாட்களாக நான் இருக்கேனா, அதற்கு யார் காரணம், ரசிகர்கள் தான் என்னை காப்பாத்துறாங்க, நான் அந்த அளவுக்கு கேம் ஆடுறேன் என கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் ஆஜீத் எகத்தாளமாக பேசியதை பார்த்து பிக் பாஸ் ரசிகர்கள் இந்த கொசு தொல்லை தாங்க முடியல என கலாய்த்து வருகின்றனர்.

அர்ச்சனா போல ஆக்டிங்
ஆரி மாதிரி விளையாடுறது சோலோ பர்ஃபார்மன்ஸ்னா அந்த சோலோவே எனக்கு வேண்டாம். நான் குரூபிசம் பண்ணிக்கிறேன், என் குரூப்புல யாரெல்லாம் வந்து சேர்ந்துக்கிறீங்க என அர்ச்சனா போல கேமராவுக்கு முன்னாடி நின்று கொண்டு பாலாஜி கூவியதை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே டென்ஷன் ஆகி விட்டனர்.

ஆரி பண்ண தப்பு
உனக்கு போய் ஆரி பெஸ்ட் பர்ஃபார்மர்னு சொன்னார் பாரு, அதுதான் அவர் பண்ண பெரிய தப்பு. ஷிவானியை காப்பாற்ற நீ ஃபேவரிடிசம் செய்வது போலவே ஆரியும் செய்திருக்க வேண்டும் என்றும், பாலாவுக்கு ஆரி பெஸ்ட் பர்ஃபார்மருக்கு ஓட்டுப் போட்டிருக்கக் கூடாது என ஆரியின் ஆர்மியினர் ட்ரோல் கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஆரியை காலி பண்ணுமா?
கண்ணாடி சிறைக்கு செல்வதில் இருந்து ஷிவானியை பாலாவால் காப்பாற்ற முடியாத நிலையில், ஆரியை வெளியேற்ற அவர் தனக்கு கிடைத்த சூப்பர் பவரை பயன்படுத்துவாரா? சுரேஷ் சக்கரவர்த்தி, சம்யுக்தா, சனம் ஷெட்டியை போலவே ஆரியையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றுவார்களா? என்கிற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.