விஜய்யுடன் நடிக்க ஆசை.. ஆனா அஜித்துடன் வில்லன் கேரக்டர் தான்.. பிரசன்னா திட்டவட்டம்!

சென்னை: திருட்டுப் பயலே 2, மாஃபியா என தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கி வரும் பிரசன்னா, விஜய் மற்றும் அஜித்துடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஃபைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமான பிரசன்னா அழகிய தீயே, கண்ட நாள் முதல், சீனா தானா 001, சாது மிரண்டா, அஞ்சாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

நாயகனாக நடித்து வந்த பிரசன்னா, அஞ்சாதே படத்தில் நெகட்டிவ் ஷேடில் நடித்து அசத்திய நிலையில், திருட்டு பயலே 2, மாஃபியா படங்களில் மிரட்டும் வில்லனாக நடித்து வருகிறார்.

மிஸ்ஸான வலிமை

மிஸ்ஸான வலிமை

மாஃபியா படத்தில் வில்லனாக நடித்த பிரசன்னா, அடுத்ததாக தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் வில்லனாக நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். ஆனால், கடைசியில் வலிமை படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்தோடு பதிவிட்டார்.

மங்காத்தா 2

மங்காத்தா 2

வலிமை படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என்ன பிரசன்னா, மங்காத்தா 2 படத்தில் நீங்க கண்டிப்பா நடிக்கிறீங்க என வெங்கட் பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜி, பிரசன்னாவுக்கு ஆறுதல் அளித்தார். கொரோனா பாதிப்பால் வலிமை பட ஷுட்டிங்கும் பாதித்துள்ள நிலையில், இந்த ஆண்டு அந்த படம் வெளியாகுமா என்பது சந்தேகம் தான்.

வில்லன் தான்

லாக் டவுன் நேரத்தில் பிரசன்னாவும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தும் லைக் போட்டும் வருகிறார். இந்நிலையில், அஜித்துடன் நடித்தால் என்ன கேரக்டரில் நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு, நிச்சயம் தல படத்தில் நடிப்பேன். நடித்தால் வில்லனாகத் தான் நடிப்பேன் எனக் கூறியுள்ளார்.

விஜய்யுடன் நடிக்க ஆசை

மேலும், தளபதியுடன் படம் நடிக்க ஆசை இல்லையா? என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, அந்த வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் அந்த ஆசையும் விரைவில் நடக்கும் என்றும் தான் எதிர்பார்ப்பதாக பிரசன்னா கூறியுள்ளார். தளபதி 65 படத்திலும் பிரசன்னா நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சமந்தாவுடன்

சமந்தாவுடன்

மாஃபியா படத்தைத் தொடர்ந்து மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாக உள்ள ஹாரர் த்ரில்லர் படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் பிரசன்னா. கொரோனா வைரஸ் பாதிப்பால், இந்நேரம் தொடங்கி இருக்க வேண்டிய அந்த படத்தின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

இயக்குநராக

இயக்குநராக

மேலும், அண்மையில் நடந்த Ask Prasanna ட்விட்டர் லைவ்வில், கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பிரசன்னா பதில் அளித்திருந்தார். நல்ல நல்ல ரோல்களில் நடித்து, அசத்தி வரும் உங்களுக்கு, படம் இயக்கும் ஆசை ஏதேனும் இருக்கிறதா? என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இப்போதைக்கு அந்த ஆசை இல்லை என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X