அண்ணாத்தவிற்காக புதிய லுக்கிற்கு மாறி இருக்கேன்...ஜெகபதி பாபு பெருமிதம்
சென்னை : சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில், ஜெகபதி பாபு முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வருகிறார். வழக்கமான வில்லன் கேரக்டர் இல்லாமல் வித்தியாசமான ஒரு கேரக்டர் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம்.
இதனால் விஸ்வாசம், ரங்கஸ்தலம், லெஜண்ட் போன்ற படங்களில் பயங்கர வில்லனாக நடித்த ஜெகபதி பாபு, அண்ணாத்த படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு, முயற்சி செய்து தனது லுக்கை மாற்றி உள்ளாராம். இதனை அவரே சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி ஜெகபதி பாபு தனது பதிவில், ரஜினி சார் படத்திற்காக முயற்சி செய்து கொடூரமான வில்லன் லுக்கை மாற்றி உள்ளேன். ஒரு வழியாக கடைசியில், அரவிந்த சமேதா படத்தின் பாசி ரெட்டி லுக்கை மாற்றி, வெற்றி அடைந்து விட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி படத்தில் நடிக்கும் மூத்த நடிகரான ஜெகபதி பாபுவிற்கு இந்த படம் நல்ல மாற்றத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் 2021 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா என முன்னணி ஹீரோயின்கள் பலர் நடிக்கிறார்கள்.
சமீபத்தில் ஜெகபதி பாபு துக் ஜெகதீஷ், ரிபப்ளிக், கானி, புஷ்பா, குக் லக் சகி போன்ற படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் கொடூரமாக வில்லன் கேரக்டர்களிலேயே நடித்ததால், ஜெகபதி பாபு என்றாலே வில்லன் முகம் நினைவில் வருவதாக பேச்சு அடிபடுகிறது. இதனை அண்ணாத்த படத்தில் மாற்றி உள்ளார் ஜெகபதி பாபு.


Click it and Unblock the Notifications











