பிக் பாஸ் வீட்டில் Nesamani?: டிஆர்பி பிச்சுக்கும்
Recommended Video
சென்னை: இன்று உலகமே பேசிக் கொண்டிருக்கும் கான்டிராக்டர் நேசமணியை பிக் பாஸ் வீட்டில் பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.
வைகைப்புயல் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தாலும் எந்த புதுப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர், ட்ரெய்லர் வந்தாலும் அதன் வடிவேலு வெர்ஷன் வெளியாகும்.
பல நேரங்களில் ஒரிஜினலை விட வடிவேலு வெர்ஷன் மெர்சலாக இருக்கும். இந்நிலையில் வடிவேலு நடித்த கான்டிராக்டர் நேசமணி கதாபாத்திரம் குறித்து உலக அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

போட்டியாளர்கள்
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் உலக மக்களை திரும்பிப் பார்க்க வைத்த கான்டிராக்டர் நேசமணியை பிக் பாஸ் 3 வீட்டில் பார்க்க ஆசைப்படுகிறார்கள் ரசிகர்கள். நேசமணி மட்டும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் டிஆர்பி எகிறிவிடும்.

நேசமணி
நேசமணி மட்டும் கலந்து கொண்டால் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி குறித்து உலக அளவில் மக்கள் பேசுவார்கள். இதை விட பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் விளம்பரம் தேட முடியாது. எங்கள் அண்ணன் கான்டிராக்டர் நேசமணி பிக் பாஸ் வீட்டில் உள்ளார் என்று தமிழ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்ப்பார்கள்.

குஷி
சும்மாவே பிக் பாஸ் நிகழ்ச்சி எப்பொழுது துவங்கும் என்று காத்திருக்கும் மீம்ஸ் கிரியேட்டர்களோ நேசமணி மட்டும் போட்டியாளராக வந்தால் படுகுஷியாகிவிடுவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீம்ஸ் கிரியேட்டர்களே பெரிய அளவில் விளம்பரம் தேடிக் கொடுத்துவிடுவார்கள். நேசமணி மட்டும் பிக் பாஸ் போட்டியாளர் ஆனால் சமூக வலைதளங்கள் முழுவதும் அவர் பற்றிய மீம்ஸாகத் தான் இருக்கும்.

வடிவேலு
படங்களில் நடிக்காத வடிவேலு பிக் பாஸ் வீட்டிற்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவதில் தவறு இல்லை. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றால் என்ன நடக்கும் என்பது வடிவேலுவுக்கு நன்றாகத் தெரியும். அதனால் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்தாலும் அவர் அந்த நிகழ்ச்சிக்கு வருவார் என்பது சந்தேகமே.

சின்னத் திரை
வடிவேலுவை பெரிய திரையில் பார்க்க முடியாமல் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். அய்யா நேசமணி, நீர் நடிக்காமலேயே உலக அளவில் டிரெண்டாகுகிறீர்கள். தயவு செய்து மீண்டும் நடிக்க வாங்க என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அவர் சின்னத்திரையில் அதுவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மட்டும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் #Nesamaniinbiggboss3 என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


Click it and Unblock the Notifications











