அட உண்மையா...இன்னைக்கே பிக்பாஸ் அல்டிமேட் ஆரம்பிக்கிறாங்களா ?
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி 30ம் தேதி துவங்கப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 5 முடிவதற்கு முன்பே ஓடிடி வெர்சன் பற்றிய தகவல்கள் வெளிவர துவங்கி விட்டன. அதுவும் 24 மணி நேரமும் ஒளிபரப்பப் போகிறார்கள் என்ற தகவல் ரசிகர்களின் உற்சாகத்தை இருமடங்காக்கியது. இந்தியில் 2021ம் ஆண்டு துவக்கத்திலேயே இதை துவக்கி விட்டார்கள். ஆனால் தமிழில் நடத்த போகிறார்களா என்பது உறுதியாக தெரியாமல் இருந்தது.
பிக்பாஸ் ஓடிடி வெர்சன் பற்றி பல தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அது உண்மை தான் என பிக்பாஸ் சீசன் 5 ஃபினாலே மேடையிலேயே அறிவித்தார் கமல். அந்த நிகழ்ச்சியையும் தானே தொகுத்து வழங்க போவதாக அறிவித்த கமல், பிக்பாஸ் அல்டிமேட் என அந்த நிகழ்ச்சியின் பெயரையும் அறிவித்து, நடிகர் சிவகார்த்திகேயன் முன்னிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான லோகோவையும் வெளியிட்டார்.

பிக்பாஸ் அல்டிமேட் தேதி
இது முடிந்த அடுத்த நாளை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியிடப்பட்டது. போட்டியாளர்கள் பற்றிய தகவல்களும் சோஷியல் மீடியாக்களில் கசிய துவங்கின. ஜனவரி 30ம் தேதி மாலை 6.30 மணிக்கு பிக்பாஸ் அல்டிமேட் துவங்கப்பட உள்ளதாகவும், இதனை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் சப்ஸ்கிரைபர்கள் 24 மணி நேரமும் பார்க்க முடியும். மற்றவர்களுக்கு ஒரு மணி நேரம் நிகழ்ச்சியாக டிவியில் ஒளிபரப்பப்படும் என கூறப்பட்டது.

என்னது...இன்று முதலா
இந்நிலையில் இன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தமிழின் ட்விட்டர் பக்கத்தில், இன்று முதல்...பிக்பாஸ் அல்டிமேட் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், என்னது இன்றைக்கே ஆரம்பிக்கிறார்களா...அப்புறம் ஏன் 30ம் தேதி துவங்குவதாக ப்ரோமோ வெளியிட்டார்கள் என கேட்க துவங்கினர். போட்டியாளர்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் நடைமுறையும் இரண்டு நாட்களுக்கு முன்பு தானே துவங்கப்பட்டுள்ளது. அப்படியானால் தனிமை காலம் 2 நாட்கள் மட்டும் தானா, 7 நாட்கள் கிடையாதா என சந்தேகம் கிளப்ப துவங்கி விட்டனர்.

ஓ...இது தான் காரணமா
ஆனால் இன்று முதல் என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பு இல்லையாம். இன்று முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளார்களாம். இன்று முதல் பிக்பாஸ் அல்டிமேட்...யார் அந்த ஹவுஸ்மேட் என்ற வாசகத்துடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்
தினம் ஒரு போட்டியாளர் என்றால், நிகழ்ச்சி துவக்க இன்னும் 7 நாட்கள் தான் உள்ளது. அப்படியானால் 7 பேர் பற்றி மட்டும் தான் சொல்வீர்களா. ஒரு நாளைக்கு இரண்டு பேர் என வெளியிடுங்கள் என கேட்டுள்ளனர். இன்னும் சிலர் போட்டியாளர்கள் யார் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும். நீங்கள் நிகழ்ச்சியை மட்டும் சொதப்பாமல் சரியாக நடத்துங்கள் என கலாய்த்துள்ளனர். போட்டியாளர்கள் யார் என்பதை கணிப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது என மீம்ஸ்களையும் போட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











