அய்யய்யோ ஜிஎஸ்டி வசனம்: அப்போ 'இந்த' படத்தையும் பாஜக எதிர்த்து, இலவச விளம்பரம் கொடுக்குமா?
சென்னை: மெர்சலை அடுத்து ஜீவா நடித்து வரும் கீ படத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காளீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி, சுஹாசினி, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் கீ. இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
படத்தின் டீஸர் இந்த மாத துவக்கத்தில் வெளியிடப்பட்டது. ப்ளூ வேல் விளையாட்டை விட மோசமான விளையாட்டு என்று எதையோ டீஸரில் குறிப்பிட்டுள்ளனர்.
பாலாஜி
கீ படத்தின் ப்ரொமோ வீடியோவில் ஆர்.ஜே. பாலாஜி ஜி.எஸ்.டி. பற்றி பேசியுள்ளார். ஜிஎஸ்டியால் இரண்டு பேர் சாப்பிட்டால் மூன்று பேர் சாப்பிடும் அளவுக்கு பில் கட்டுகிறோம் என்கிறார் பாலாஜி.

பாஜக
மெர்சல் படத்தில் விஜய் ஜிஎஸ்டி பற்றி பேசிவிட்டார் என்று தான் பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.

ஜீவா
கீ படத்தில் ஆர்.ஜே. பாலாஜி ஜி.எஸ்.டி. பற்றி பேசியிருப்பதால் இந்த படத்திற்கும் பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

விளம்பரம்
கீ படத்தை பாஜக எதிர்த்தால் நல்லது தான். படத்திற்கு தேசிய அளவில் இலவசமாக நல்ல விளம்பரம் கிடைக்கும். ஜீவாவுக்கு ஹிட் படம் கிடைக்கும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











