எங்கட்ட காட்டாம படத்தை வெளியிட்டால் தியேட்டரை கொளுத்துவோம்: இயக்குனரை மிரட்டும் அமைப்பு
மும்பை: பத்மாவதி படத்தை தங்களுக்கு திரையிட்டு காட்டாமல் ரிலீஸ் செய்தால் தியேட்டர்களை எரித்துவிடுவோம் என்று ஜெய் ராஜ்புடானா சங் என்ற அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷாஹித் கபூர், அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பத்மாவதி. ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்று படம்.
பத்மாவதி படம் டிசம்பர் மாதம் ரிலீஸாகிறது.

ரிலீஸ்
பத்மாவதி படத்தை தங்களுக்கு திரையிட்டு காட்டிய பிறகே ரிலீஸ் செய்ய வேண்டும். இல்லை என்றால் படம் வெளியிடும் தியேட்டர்களை எரித்துவிடுவோம் என்று ஜெய் ராஜ்புடானா சங் என்ற அமைப்பு பன்சாலிக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

அலாவுத்தீன்
ராணி பத்மினி, அலாவுத்தீன் கில்ஜி இடையே காதல் என்று காட்டி வரலாற்றை மாற்றியிருந்தால் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று ஜெய் ராஜ்புடானா சங் அமைப்பின் நிறுவனர் பன்வார் சிங் ரெடா தெரிவித்துள்ளார்.

ஏகே 47
ஏகே 47 துப்பாக்கிகள் முதல் பல தரப்பட்ட ஆயுதங்களை கையாளும் பயிற்சி எங்கள் ஆட்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பத்மினியை யாரும் அவமதிக்க விட மாட்டோம். ராஜஸ்தான் மக்களை யாரும் அவமதிக்க அனுமதிக்க மாட்டோம் என்கிறார் பன்வார் சிங்.

பன்சாலி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்மாதி படப்படிப்பு நடந்தபோது ராஜ்புட் கர்ணி சேனா என்ற அமைப்பு அங்கு வந்து செட்டை அடித்து நொறுக்கி இயக்குனர் பன்சாலியையும் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











