நாகேஷுக்கு கை கொடுத் சர்வர் சுந்தரம்.. யோகியை தூக்கி விடுவாரா பட்லர் பாபு!

By

Recommended Video

நாகேஷுக்கு கை கொடுத் சர்வர் சுந்தரம் | Filmibeat tamil

சென்னை: நாகேஷுக்கு சர்வர் சுந்தரம் கை கொடுத்தார். மிகப்பெரிய ஹிட்டானது அப்படம். அதே பாணியில் இபபோது யோகி பாபு பட்லர் பாபு என்ற படத்தில் சமையல்காரராக நடிக்கிறார்.

நாகேஷை ஒரு முழு நீள நாயகனாக அடையாளம் காட்டிய படம் சர்வர் சுந்தரம். அசத்தியிருப்பார். அந்தப் படத்திற்கு நிகராக இதுவரை எந்தப் படமும் வரவில்லை. இந்தப் படத்தைத்தான் தற்போது சந்தானம் ரீமேக் செய்கிறார். படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் யோகி பாபு ஒரு சமையல்கார வேடத்தில் நடிக்கிறார்.

will butler babu help yogi babu to become a big hero in kollywood

பட்லர் பாபு என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் கிட்டத்தட்ட சர்வர் சுந்தரம் போல தனக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் யோகி. இவரது காமெடிக்கு தனி முத்திரை உள்ளது. எனவே இப்படம் மிகப் பெரிய திருப்புமுனையாக யோகி பாபுவுக்கு அமையும் என்று நம்புகிறார்கள். இப்படத்தில் இமான் அண்ணாச்சி, தாடி பாலாஜி என ஏகப்பட்ட காமெடியன்களும் நடிக்கிறார்களாம். பார்க்கலாம்.

கெளதம் வாசுதேவ் மேன் படம் என்றால் அதில் ஸ்டைல் இருக்கும், கிளாஸ் இருக்கும். இப்போது அவர் இயக்கிய 2 படம் கிடப்பில் இருக்கு. அதில் ஒன்றான என்னை நோக்கி பாயும் தோட்டா 29ம் தேதி வருது. போஸ்டர் வெளியிட்டுள்ளார். கெளதம் திருவிழாவைக் கொண்டாட எல்லோரும் தயாராவோம். அதேபோல யோஹன் அத்தியாயம் 1 படத்தை ஜோஷுவா என்று பெயர் மாற்றியுள்ளார் கெளதம். இப்பயாச்சும் வருமான்னு நினைக்காதீங்க. கண்டிப்பா வரும்.

ஆடை சர்ச்சையைக் கிளப்பிய படம். அமலா பால் நடித்தது. ஆனால் படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதை இந்தியில் இயக்கப் போகின்றனர். முகேஷ் பட் வாங்கியுள்ளார். ஹீரோயின் யாருன்னா கங்கனா ரனாவத் என்று சொன்னார்கள்.. ஆனால் அவர் நடிக்கவில்லையாம். இப்போது, அமலா பாலை விட அருமையாக நடிக்கும் அந்த நடிகை யார் என்ற எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

தனுஷை விட அதிக சம்பளம் வாங்குகிறாராம் சிவகார்த்திகேயன். ஆனால் கம்மியான சம்பளம் வாங்குபவர் விஜய் சேதுபதிதானாம். வில்லனாக நடிக்க ஒன்றரை கோடிதான் கேட்டுள்ளாராம். முக்கியமான நடிகர் இப்படி கம்மியா வாங்கலாமா என்று விஜய் சேதுபதிக்கு பலரும் அட்வைஸ் செய்கிறார்களாம். ஆனால் பார்ட்டி அமைதியாக சிரித்தபடி கடந்து விடுகிறாராம். ஆனாலும் இவ்வளவு அடக்கம் கூடாதுப்பு.

சிறுத்தை சிவா படத்துக்குப் பிறகு வெற்றி மாறன் படத்துக்கு ரஜினி வரப் போவதாக சொல்கிறார்கள். இது பக்கா அரசியல் கதையாம். ரஜினிக்கு அது பிடிச்சிருக்காம். அதுதான் கடைசிப் படமாக இருக்குலாம் என்ற ஒரே பேச்சும் உள்ளது. பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X