இந்தியன் 2 படத்துக்கு வந்த புதிய சிக்கல்.. இந்த கேமராமேனும் கிளம்ப போறாராம்.. அப்செட்டில் ஷங்கர்?

சென்னை: எந்த நேரத்தில் இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப் பட்டதோ தெரியவில்லை. தொடர்ந்து, அடுக்கடுக்கான பிரச்சனைகளை அந்த படம் சந்தித்து வருகிறது.

நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ், அரசியல், விக்ரம் என பிசியாகி விட்டார். லைகா நிறுவனம் சிவகார்த்திகேயனை டானாக்கி வருகிறது.

படத்தின் ஒளிப்பதிவாளரான ரத்னகுமார் கூடிய விரைவில் கம்பி நீட்டப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

20 வருஷத்துக்கு பிறகு

20 வருஷத்துக்கு பிறகு

கமல்ஹாசனுடன் இயக்குநர் ஷங்கர் இணைந்து உருவாக்கிய இந்தியன் திரைப்படம் தேசிய விருதையே தட்டிச் சென்றது. அதன் பிறகு 20 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப் பட்டது. ஆனால், இன்னமும் அந்த படம் இறுதி கட்டத்தை நெருங்கவில்லை. அதற்குள் ஏகப்பட்ட தடங்கல்கள் அந்த படத்தை சுற்றி வந்து கொண்டே இருக்கின்றன.

3 பேர் பலி

3 பேர் பலி

சென்னையை அடுத்து பூந்தமல்லியில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியன் 2 ஷூட்டிங் ஆரம்பமானது. ஆனால், எதிர்பாராத விதமாக கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர்.

அதோட நிறுத்தம்

அதோட நிறுத்தம்

அதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவ இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் அப்படியே கிடப்பில் போடப் பட்டுள்ளன. இன்னமும் இந்தியன் 2 ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்றே தெரியாமல் அந்த படக்குழுவை சார்ந்த பலரும் தவித்து வருகின்றனர். நடிகர்கள் எல்லாம் புதிய படங்களில் கமீட் ஆகி நடித்தும் வருகின்றனர்.

பிசியான கமல்

பிசியான கமல்

இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்க தாமதம் ஆகும் என அறிந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன், அந்த படத்தை விட்டு விட்டு, பிக் பாஸ், அரசியல் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என படு பிசியாகி விட்டார். கையோடு தலைவன் இருக்கின்றான் படத்தையும் முடித்து விடுவார் போல தெரிகிறது.

கல்யாணம் பண்ண காஜல்

கல்யாணம் பண்ண காஜல்

இந்தியன் 2 படத்தின் நடிகையான காஜல் அகர்வால், ஒரு படி மேலே சென்று கல்யாணமே பண்ணிக் கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிக்கவிருப்பதால், அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வெங்கட் பிரபுவின் லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸ், பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் ஹே சினாமிகா என அவரும் மறு பக்கம் பிசியாகி விட்டார்.

பொன்னியின் செல்வன் ரெடி

பொன்னியின் செல்வன் ரெடி

இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கை லைகா நிறுவனம் ஆரம்பிக்க என்ன தான் பிரச்சனை என்றே புரியவில்லை. அதிக நடிகர்களுடன் பிரம்மாண்ட அரங்குகளுடன் படம் தயாரிக்க முடியாது என்றால், பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கே முடிந்து இந்த ஆண்டு ரிலீசுக்கு ரெடியாகி விடும் என்கின்றனர்.

சிவகார்த்திகேயனின் டான்

சிவகார்த்திகேயனின் டான்

மறுபுறம் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிக்கும் டான் படத்திற்கும் பூஜை போட்டு பணிகளை துவங்கிவிட்டது லைகா நிறுவனம். ஷூட்டிங்கை தொடங்க முடியாமல் கடும் அப்செட்டில் இருப்பது இயக்குநர் ஷங்கர் தான் என்றும் கூறுகின்றனர்.

அடுத்த அதிர்ச்சி

அடுத்த அதிர்ச்சி

இந்நிலையில், படத்தின் ஒளிப்பதிவாளரான ரத்னவேல் ஷூட்டிங் தாமதம் ஆகிக் கொண்டே போவதால், படத்தில் இருந்து விலக உள்ளதாகவும், இன்னொரு பெரிய பட வாய்ப்பு கிடைத்திருப்பதால் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. முன்னதாக இதே காரணத்துக்காக ரவிவர்மா படத்தில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X