கள்ள உறவு: அதிமுக ஆதரவு கவிஞர் சினேகன் கைது செய்யப்படுவாரா?

பிரபல சினிமா பாடல் ஆசிரியரும், நடிகருமான சினேகன் மீது, எஞ்ஜினீயர் பிரபாகரன் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.
அதில், தனது மனைவியையும், குழந்தையையும் கடத்திச் சென்றுவிட்டதாக கூறியிருந்தார். அந்த புகார் மனு அடிப்படையில் பிரபாகரனிடமும், அவரது மனைவியிடமும் வரதட்சணை ஒழிப்பு போலீசார் கவுன்சிலிங் மூலம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த புகார் அடிப்படையில் கவிஞர் சினேகன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சென்னை நகர சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் தாமரைக்கண்ணனிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், "சினேகன் மீது புகார் கொடுத்த பிரபாகரனிடமும், அவரது மனைவியிடமும் வரதட்சணை ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அடுத்த கட்டமாக சினேகனிடமும் விசாரணை நடத்தப்படும். தவறு செய்திருந்தால் கண்டிப்பாக சட்டபூர்வ கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்றார்.
சினேகன் அதிமுக ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











