Coolie Box Office: லியோ முதல் நாள் வசூலை துவம்சம் பண்ணுமா கூலி?.. ஓவர்சீஸில் செம ஓபனிங்.. வசூல் கணிப்பு!
சென்னை: வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக காத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தின் மீதுதான் ஒட்டுமொத்த திரையுலகின் கண்களும் உள்ளன. இதுவரை தமிழ் சினிமாவில் எந்தவொரு படமும் 1000 கோடி ரூபாய் மைல் கல்லை எட்டவில்லை. கோலிவுட் சினிமாவை தவிர பாலிவுட், டோலிவுட் மற்றும் கன்னட திரையுலகம் கூட 1000 கோடி வசூலை சாத்தியமாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதிகபட்சமான வசூலை 2.0 அள்ளியிருப்பதாக கூறுகின்றனர். அந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் விஜய்யின் லியோ படங்கள் தான் 600 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டியுள்ளன.

அதிலும், தமிழ் சினிமாவில் முதல் நாள் அதிக ஓபனிங் செய்த படமாக இதுவரை லியோ திரைப்படம் தான் முதல் நாளிலேயே 148 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய படமாக உள்ளது. அந்த வசூலை கூலி திரைப்படம் முந்துமா என்பது குறித்த பாக்ஸ் ஆபீஸ் கணிப்பை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
6 நாள் முன்பாகவே 25 கோடி வசூல்: பாலிவுட்டின் பிரபல பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர் சுமித் கடேல் தனது ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் கூலி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த கணிப்புகளை வெளியிட்டுள்ளார். படம் வெளியாக 6 நாட்கள் இன்னமும் இருக்கும் நிலையில், இப்போதே, ஓவர்சீஸ் டிக்கெட் புக்கிங் வசூல் மட்டும் 25 கோடிக்கும் அதிகமாக வந்திருப்பதாக கூறியுள்ளார்.
80 கோடிக்கும் அதிகமாக வரும்: வெளிநாடுகளில் மட்டுமே கூலி படம் முதல் நாள் வசூலாக 70 முதல் 80 கோடி வரை வசூல் செய்யும் என அவர் கணித்துள்ளார். கூலி படத்தில் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹீர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கூட கல்லா கட்டும் என்கின்றனர்.
லியோ வசூலை முந்துமா?: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் நாளில் அதிகபட்சமாக 148 கோடி வசூல் செய்தது. இந்நிலையில், கூலி திரைப்படம் முதல் நாளில் அதிகபட்சமாக 130 முதல் 140 கோடி ரூபாய் வரை உலகளவில் வசூல் ஈட்டும் என சுமித் கடேல் குறிப்பிட்டுள்ளார். லியோ வசூலை முந்த 8 கோடி மட்டுமே குறைவாக உள்ள நிலையில், அதனை முறியடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது என்கின்றனர்.
வார் 2 வசூல் கணிப்பு: கூலி படத்தை பாக்ஸ் ஆபீஸில் முந்த வேண்டும் என்றால் வார் 2 திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே 90 கோடி வசூல் செய்ய வேண்டும் என்றும் ஓவர்சீஸில் இதுவரை அந்த படத்துக்கு பெரிதாக வரவேற்பு இல்லை என்றும் கூறியுள்ளார். வரும் ஆகஸ்ட் 14ம் தேதி கூலி திரைப்படம் வார் 2 படத்துடன் மோதியே இப்படியொரு கலெக்ஷனை அள்ளினால் அது மிகப்பெரிய சாதனை என்றே கூறுகின்றனர். லோகேஷ் கனகராஜின் முந்தைய படத்தை அவரது அடுத்த படம் முறியடிக்குமா? என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











