வலுக்கும் எதிர்ப்பு: குஷ்பு, லட்சுமி நடத்தும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் தடை செய்யப்படுமா?
சென்னை: குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு தடை கோரி வலுப்பு அதிகரித்து வருகிறது.
தமிழில் குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன், மலையாளத்தில் ஊர்வசி, தெலுங்கில் கீதா ஆகியோர் தம்பதிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாயத்து செய்யும் நிகழ்ச்சிகளிலேயே பல பஞ்சாயத்து நடந்து வருவது தனிக் கதை.

ஸ்ரீப்ரியா
குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்தும் நடிகைகளுக்கு அதற்கான தகுதி இருக்கிறதா என்று முதலில் குரல் கொடுத்தார் நடிகை ஸ்ரீப்ரியா. இதையடுத்து நடிகை ராதிகா சரத்குமார் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.

சாடல்
ஸ்ரீப்ரியா குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை கட்டப்பஞ்சாயத்து என கடுமையாக சாடியுள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சிகளை நடத்தும் இரண்டு நடிகைகளையும் அவர் விமர்சித்துள்ளார். அந்த நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ரஞ்சனி
முதல் மரியாதை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த நடிகை ரஞ்சனி குஷ்பு நிஜங்கள் நிகழ்ச்சியில் ஒருவரின் சட்டையை பிடித்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். மேலும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை தடை செய்ய அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தடை
குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும் என்று ஸ்ரீப்ரியா, ரஞ்சனி மட்டும் அல்ல ஏராளமான ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து அந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











