Don't Miss!
- News
தலைக்கு மேல் தேர்தல் வேலை! ஆட்டம் காணும் அண்ணாமலையின் மெகா திட்டம்! என்ன பின்னணி?
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Finance
புதிய வருமான வரிக்கு பலே வரவேற்பு.. 66% பேர் மாறுவார்கள்.. சொல்வது யார் தெரியுமா..?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Lifestyle
சுக்கிரன் உருவாக்கும் மாளவியா யோகம்: பிப்ரவரி 15 முதல் இந்த 5 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது..
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நமீதா மாரிமுத்துவை போல சனிக்கிழமையே வாக்கவுட் ஆகப் போகிறாரா தனலட்சுமி? இது என்னடா புது உருட்டு!
சென்னை: பிக் பாஸ் போட்டியாளர் ஜிபி முத்துவை சக போட்டியாளரான தனலட்சுமி அழ வைத்த நிலையில், ஜிபி முத்து ஆர்மி வெகுண்டு எழுந்து விட்டது.
தனலட்சுமியை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றுங்கள் என்கிற கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.
இதில், சில தீவிர ரசிகர்கள் பிக் பாஸ் ஸ்க்ரிப்ட் படி முதல் வாரம் எலிமினேஷன் இல்லாத நிலையில், தனலட்சுமி வீட்டை விட்டு அவரே அதிரடியாக வெளியேறுவார் என புதுக்கதை ஒன்றை உருட்டி வருகின்றனர்.
ஜிபி முத்து நாரதர் வேலை பாக்குறாரு..அவர பாத்தாலே கண்டாகுது..பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ!

தனலட்சுமி vs ஜிபி முத்து
சாம்பார் சண்டையில் ஆரம்பித்து ஜிபி முத்துவுடன் பயங்கர சண்டையே போட்டு தனலட்சுமி பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகி விட்டார். சில மிக்சர் போட்டியாளர்கள் போல எல்லாம் அமைதியாக இருக்காமல் உடனடியாக சண்டை எல்லாம் போட்டு அதுவும் ஜிபி முத்துவுடன் சண்டை போட்டு லைம் லைட்டில் வந்து விட்டார்.

கதறி அழுத முதல் போட்டியாளர்
ஜிபி முத்து கண்ணீர் விட்டு கதறி அழுததை பார்த்த ரசிகர்கள் இதற்கு காரணமாக மாறிய தனலட்சுமியை கடுமையாக திட்டி வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 6ல் கதறி அழும் முதல் போட்டியாளராக ஜிபி முத்து மாறிவிட்டார்.
ஷோ முடிவதற்குள் இன்னும் யாரெல்லாம் அழ போறாங்களா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

எவிக்ஷன் இல்லை
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் எவிக்ஷன் இல்லாத நிலையில், அடுத்த வாரம் முதல் நபராக தனலட்சுமி வெளியேறுவார் என்றும் போட்டியாளர்கள் அதிகளவில் தனலட்சுமியை தான் நாமினேட் செய்வார்கள் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.சில ரசிகர்கள் இன்னமும் டீப்பாக யோசித்து ஜோசியம் எல்லாம் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

6வது நாள் வாக் அவுட்
அடுத்த வாரம் எல்லாம் இல்லைங்க, வீட்டில் இப்பவே கூட்டம் ஜாஸ்தியாக இருப்பதால் இந்த வாரமே ஏதாவது டிராமா செய்து 6வது நாளிலேயே ஒரு போட்டியாளரை அதிரடியாக வெளியேற்றி விடுவார்கள் பாருங்கள் என்றும், அதிகபட்சமாக தனலட்சுமி தான் பர்ஸ்ட் அவுட் ஆகி வெளியேறினார் என்று சொல்வார்கள் என்றும் பயங்கர ஜோசியம் பார்த்து வருகின்றனர்.

நமீதா மாரிமுத்து போல
கடந்த 5வது சீசனிலும் இதே போலத்தான் நமீதா மாரிமுத்துவை முதல் வாரம் முடிவதற்கு முன்னமே சண்டை போட வைத்து வெளியே அனுப்பி விட்டனர். இப்போ அவர் கூலாக பிக் பாஸ் விமர்சனம் செய்து வருகிறார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். அப்படி ஏதாவது நடக்க வாய்ப்பிருக்கிறதா? என்கிற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.