தனுஷுக்கு தெலுங்கில் குவியும் வாய்ப்புகள்.. இரண்டாவது தெலுங்கு படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்!

சென்னை : தனுஷின் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான ஜகமே தந்திரம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தன்னுடைய 43வது திரைப்படத்தில் நடித்து வர மாளவிகா மோகனன் ஜோடியாக நடிக்கிறார்.

தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வரும் தனுஷுக்கு தெலுங்கில் இருந்தும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஏற்கனவே தனுஷ் முதல் தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகி இருக்க இரண்டாவது படத்தைப் பற்றிய முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது

இந்திய அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் வியப்படைய வைத்து வருகிறார். அசுரன்,கர்ணன் என தொடர் வெற்றிகளை கொடுத்த தனுஷுக்கு சமீபத்தில் ஜகமே தந்திரம் வெளியானது. திரையரங்கில் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜகமே தந்திரம் சில சூழ்நிலைகள் காரணமாக ஓடிடியில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

ஹாலிவுட்

ஹாலிவுட்

இதையடுத்து ஹாலிவுட்டுக்கு பறந்து சென்ற தனுஷ் அங்கு தி க்ரே மேன் படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார். உலக அளவில் வசூலை வாரி குவித்த அவெஞ்சர்ஸ் தி எண்டு கேம் படக்குழுவினருடன் இணைந்து நடித்து வரும் தி க்ரே மேன் படத்தின் மூலம் உலக அளவில் அறியப்படும் மிகப் பெரிய நடிகராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் டி 43 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்தது. இப்பொழுது ஹைதராபாத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொண்டுள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்க இருவருக்கும் இடையேயான காட்சிகள் நேற்று ஹைதராபாத்தில் படம்பிடிக்கப்பட்டது. மேலும் இதில் சமுத்திரக்கனி, மூக்குத்தி அம்மன் ஸ்ம்ருதி வெங்கட், சூரரைப்போற்று கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தெலுங்கில் அறிமுகமாகிறார்

தெலுங்கில் அறிமுகமாகிறார்

தனுஷின் பல படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பு பெற்று வரும் நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு தனுஷை தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர். இதன் பலனாக இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஒப்பந்தமாகி தெலுங்கில் அறிமுகமாகிறார் என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இப்படம் மூன்று மொழிகளில் உருவாகிறது எனவும் கூறப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்

இந்த நிலையில் 2வது தெலுங்கு படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் அந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நாக வம்சி தயாரிக்கிறார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த தனுஷை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியான ரங்தே பட இயக்குனர் வெங்கி அட்லுரி இப்படத்தை இயக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X