என்னது...முழுநேர டைரக்டர் ஆகிறாரா தனுஷ்...அதிர்ச்சியில் ரசிகர்கள்

சென்னை : தனுஷ் தற்போது நடித்து வரும் ஹாலிவுட் படமான கிரே மேன் படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்ட விரைவில் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்ப உள்ளார். இதற்கிடையில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படம் ஜுன் 18 ம் தேதி ஓடிடி.,யில் ரிலீசாக உள்ளது.

மதுரை முதல் லண்டன் வரையிலான நிகழ்வுகளை உள்ளடக்கிய இப்படம் நெட்பிளிக்சில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ, ஜோசப் ஜார்ஜ், ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன் உள்ளிட்ட நடித்துள்ளனர்.

ஓடிடி.,யில் ஜகமே தந்திரம்

ஓடிடி.,யில் ஜகமே தந்திரம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ள ஜகமே தந்திரம் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படும் பிரம்மாண்ட படம் இதுவாகும். இந்த படம் தெலுங்கிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

சாதனை படைத்த புஜ்ஜி பாடல்

சாதனை படைத்த புஜ்ஜி பாடல்

படம் ரிலீசாவதற்கு பல மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் பாடல்கள் மெகாஹிட் ஆகி விட்டன. அதிலும் புஜ்ஜி பாடல் யூட்யூப்பில் அதிகமான பார்வைகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. முதலிடத்தை பிடிப்பதில் ரவுடி பேபி பாடலுக்கும், புஜ்ஜி பாடலுக்கு பெரிய போட்டியே நடந்து வருகிறது.

தனுஷின் எதிர்கால திட்டம்

தனுஷின் எதிர்கால திட்டம்

இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களுடன் தனுஷ் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஓருவர், உங்களின் எதிர்கால திட்டம் என்ன என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த தனுஷ், விரைவில் எந்த நேரத்திலும் டைரக்ஷனில் இறங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் உடனடியாக டைரக்டராகும் திட்டம் ஏதும் இல்லை என தனுஷ் தெரிவித்துள்ளார்.

3 டைரக்டர்களுடன் பணியாற்றுகிறேன்

3 டைரக்டர்களுடன் பணியாற்றுகிறேன்

மேலும் அவர் கூறுகையில், தற்போது மாரி செல்வராஜ், ராம், கார்த்திக் சுப்பராஜ் போன்ற துடிப்பான இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறேன். மூன்று பேருமே திறமையான, இளம் டைரக்டர்கள். அவர்களுடன் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

3 ஆண்டுகளுக்கு பிஸி

3 ஆண்டுகளுக்கு பிஸி

அதனால் உடனடியாக டைரக்டஷனில் இறங்கும் திட்டம் இல்லை. அடுத்த 3 ஆண்டுகளுக்கு டைரக்ஷன் பணிகளை கையில் எடுக்க முடியாத அளவிற்கு பிஸியாக உள்ளேன். அதற்கு பிறகே மற்ற திட்டம் பற்றி யோசிக்க வேண்டும் என தெளிவுபடுத்தினார்.

பவர் பாண்டியை இயக்கிய தனுஷ்

பவர் பாண்டியை இயக்கிய தனுஷ்

தனுஷ், டைரக்டர் அவதாரம் எடுப்பது புதிதல்ல. ஏற்கனவே 2017 ல் ராஜ்கிரண், ரேவதி நடித்த பவர் பாண்டி படத்தை தனுஷ் தான் டைரக்ட் செய்திருந்தார். இது தான் அவர் இயக்குனராக அறிமுகமான படமாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X