Dhurandhar 2 Box Office: புஷ்பா 2 வசூலுக்கு வேட்டு.. முதல் நாளில் 300 கோடி வசூலை ஈட்டுமா துரந்தர் 2?
சென்னை: ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் The Revenge திரைப்படம் முதல் நாளிலேயே புஷ்பா 2 படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 19ம் தேதி எந்தவொரு பெரிய போட்டியும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் தியேட்டருக்கு துரந்தர் 2 அழைத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை பாலிவுட்டில் எந்தவொரு படமும் முதல் நாள் 200 கோடி ஓபனிங் செய்யாத நிலையில், துரந்தர் 2 முதல் நாளில் 300 கோடி வசூலை ஈட்டும் என பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.

துரந்தர் படத்தின் முதல் பாகமே 1000 கோடி வசூல் ஈட்டிய நிலையில், 2வது பாகம் இந்தி மொழியை தாண்டி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாக ஒரு வாரமே உள்ள நிலையில், பெரிய அளவுக்கு புரமோஷன்களை தென்னிந்தியாவில் செய்யவில்லை என்றாலும் வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்பா 2 தான் டாப் ரெக்கார்டு: இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய படமாக அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. 294 கோடி ரூபாய் வசூலை முதல் நாளே இந்தியா மற்றும் ஓவர்சீஸில் ஈட்டி அல்லு அர்ஜுன் ருத்ர தாண்டவம் ஆடினார். புஷ்பா 2வுக்கு அடுத்த இடத்தில் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் 223 கோடி வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. ராஜமெளலியின் பாகுபலி 2 திரைப்படம் தான் இந்திய சினிமாவில் முதன் முதலாக முதல் நாளில் 210 கோடி ரூபாய் ஓபனிங்கை பெற்று புதிய மைல்கல்லை தொட்டது.
300 கோடி வசூல் சாத்தியமா?: துரந்தர் 2 திரைப்படம் மார்ச் 18ம் தேதியே பெய்ட் ப்ரீமியர் ஷோக்களை வெளியிட உள்ளது. அதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டு இதுவரை 40 கோடி ரூபாய் வசூலை பெய்ட் ப்ரீமியர் ஷோவில் மட்டுமே அள்ளியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், பெய்ட் ப்ரீமியருடன் சேர்த்து முதல் நாளில் அதிகப்படியாக புஷ்பா 2 வசூலை துரந்தர் 2 கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர். 300 கோடி வசூலை துரந்தர் 2 முதல் நாளில் ஈட்டினால் அது வரலாற்று சாதனையாக மாறிவிடும். 200 கோடிக்கு மேல் ஓபனிங் வைத்தால் பாலிவுட்டின் முதல் 200 கோடி வசூல் படம் என்கிற அந்தஸ்த்தை துரந்தர் 2 கண்டிப்பாக அடையும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











