twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜித் சொன்ன 'லவ் மேட்டர்': அந்த இயக்குநர் இனியாவது திருந்துவாரா?

    By Siva
    |

    சென்னை: காதல் பற்றி அஜித் சொன்ன ஒரு விஷயம் உண்மை தான் என்றாலும் அதை தற்போதுள்ள இயக்குநர்கள் ஏற்பார்களா என்பது தான் தெரியவில்லை.

    பிங்க் படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்பது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் விருப்பம். ஸ்ரீதேவி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ள அஜித் அவரின் ஆசையை நிறைவேற்ற நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

    அந்த படத்தில் நடிக்க அவர் வினோத்திடம் தெரிவித்த காரணம் தான் அனைவரையும் கவர்ந்துள்ளது.

    பெண்கள்

    பெண்கள்

    நான் முன்பு நடித்த படங்களில் காதலிக்கிறேன் என்ற பெயரில் பெண்களை பின்தொடர்ந்திருக்கிறேன். அதற்கு பெயர் காதல் இல்லை. அது தவறு என்று தற்போது புரிந்துள்ளதாக தெரிவித்துள்ளார் அஜித். அஜித் தெரிவித்த இந்த விஷயம் ரசிகர்களை கவர்ந்தாலும் பல இயக்குநர்களுக்கு நறுக்கென்று கொட்டியது போன்று உள்ளது.

    ஹீரோயின்

    ஹீரோயின்

    அப்பொழுது மட்டும் அல்ல தற்போதும் கூட ஹீரோ ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்ற பெயரில் அவரை பின்தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார். பெண்ணை ஃபாலோ பண்ணுவது தான் காதல் என்ற கான்செப்ட் இன்னும் மாறவே இல்லை. இதை இனியாவது இயக்குநர்கள் மாற்றிக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    இயக்குநர்

    இயக்குநர்

    குறிப்பாக ஒரு இயக்குநரின் படங்களில் ஹீரோ ஹீரோயினை பின்தொடர்ந்து செல்வது மட்டும் அல்லாமல் அவரை கேலி செய்வது தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் ஈவ் டீஸிங் செய்வது தான் காதல் என்று காட்டுகிறார். ஹீரோவே ஹீரோயினை கேவலமாக கலாய்ப்பார். பெண்களை கிண்டல் செய்து வழிக்கு கொண்டு வருவது தான் காதல் என்ற எண்ணத்தை அந்த இயக்குநர் இனியாவது மாற்றிக் கொள்வாரா?

    ஞானோதயம்

    ஞானோதயம்

    இத்தனை ஆண்டுகளாக அஜித்தும் ஹீரோயின்களை பின்தொடர்ந்து தானே சென்றார், என்ன திடீர் ஞானோதயம் என்று கேட்கலாம். பெரிய ஹீரோக்கள் செய்வதை பார்த்து ரசிகர்களும் அதையே செய்ய விரும்புகிறார்கள். அதை மாற்ற ஒருவர் நினைக்கிறார். அவர் செல்லும் வழியில் அனைவரும் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் சென்றால் சமூகத்திற்கு நல்லது என்று தான் கூறுகிறோம்.

    தத்துவம்

    தத்துவம்

    அஜித்துக்கு வயதாகிவிட்டது அதனால் அப்படி கருத்தாக பேசுகிறார் என்று கூட நினைக்கலாம். நல்லதை யார் சொன்னால் என்ன, மாற்றம் தானாக ஏற்படாது, நாம் தான் ஏற்படுத்த வேண்டும். அதை அஜித் துவக்கி வைத்துள்ளார். அவரை பின்தொடர்வதும் இல்லை பெண்களை பின்தொடர்ந்து அதை காதல் என்று சித்திரிப்பதும் அவரவர் விருப்பம்.

    English summary
    Ajith thinks that stalking women is not love. Will this pave way for new concept in Kollywood?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X