திரையரங்கா அல்லது OTT யா? அமைதி காக்கும் டாக்டர் படக்குழு!

சென்னை: நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை KJR STUDIOS நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹிட் அடித்த பாடல்கள்

ஹிட் அடித்த பாடல்கள்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படத்தின் மேல் எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. படக்குழுவினர் டீசர்/ட்ரைலர் ஏதும் இதுவரை வெளியிடவில்லை என்றாலும் செல்லம்மா, நெஞ்சமே, ஓ பேபி என படத்தின் மூன்று பாடல்களும் வைரலாகி ஹிட் அடித்துள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

கடந்த மார்ச் மாதம் வெளியாக வேண்டிய இந்த படம் சட்டமன்ற தேர்தல், கொரோனா இரண்டாம் அலை என தொடர் சிக்கல் காரணமாக வெளியாகாமல் கிடப்பில் உள்ளது. படத்தை எதிர்பார்த்து காத்துள்ள ரசிகர்களுக்கு இது மிகவும் ஏமாற்றமாகவே உள்ளது.

தொடரும் சிக்கல்

தொடரும் சிக்கல்

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் இன்னும் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருக்க பல படங்கள் திக்குமுக்காடி கொண்டியிருக்கிறது. அதில் சில படங்கள் OTT ரிலீசுக்கு ஒப்பந்தமாகியுள்ளது. ஆனால் டாக்டர் படத்தின் நிலைமையோ ஒரு முடிவுக்கு வரவில்லை.

அமைதிகாக்கும் KJR

அமைதிகாக்கும் KJR

டாக்டர் OTT ரிலீஸ் என ஒரு புறம் தகவல் பரவி வர தயாரிப்பு நிறுவனமான KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் அமைதி காத்து வருகிறது. திரையரங்கா அல்லது OTT யா என்பது குறித்த முக்கிய அறிவிப்பை நிச்சயம் இந்த வாரம் படக்குழு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு எழும்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X