சுர்யா - சுதா கொங்கரா இணையும் படத்தில் துல்கர் சல்மான்...தீயாய் பரவும் பரவும் தகவல்

சென்னை : சுர்யா தற்போது பிஸியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டுமின்றி, கெஸ்ட் ரோல்களிலும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

Will Dulqar Salman to part of Suriya - Sudha Kongara movie

சுர்யா 41, வாடிவாசல், சிறுத்தை சிவா இயக்கும் படம், ஞானவேல் இயக்கும் படம், சுதா கொங்கரா படம், ரவிக்குமார் இயக்கும் படம், இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் 3, கைதி 2 என வரிசையாக பட படங்கள் காத்திருக்கின்றன. விக்ரம், ராக்கெட்ரி படங்களைத் தொடர்ந்து சுரரைப் போற்று இந்தி ரீமேக்கிலும் சுர்யா கெஸ்ட் ரோலில் நடிக்க போகிறார்.

இவற்றில் எதில் சுர்யா முதலில் நடிக்க போகிறார் என தெரியவில்லை. ஆனால் இனி வரிசையாக சுர்யா படங்கள் தான் அதிகம் வர போகிறது என்பது மட்டும் கன்ஃபார்ம். இதனால் சுர்யாவின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அப்டேட் எப்போது வரும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சுர்யா நடத்த முதல் படம் சுரரைப் போற்று. ஓடிடியில் ரிலீசானாலும் சுப்பர் ஹிட்டான இந்த படம் ஆஸ்கர் வரை சென்றது. ஆனால் கடைசி நிமிடத்தில் இந்த படத்திற்கு விருது கிடைக்காமல் போனது. தற்போது சுர்யா -சுதா கொங்கரா மீண்டும் ஒரு படத்தில் இணைய போகிறார்கள்.

ஆனால் சுர்யா மட்டுமல்ல சுதா கொங்கராவும் சுரரைப் போற்று இந்தி ரீமேக்கை இயக்கி வருவதால், சுர்யா - சுதா கொங்கரா இணையும் படத்தை துவக்க சிறிது காலம் ஆகும். ஆனால் அதற்குள் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் இந்த படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் தீயாய் பரவி வருகிறது.

துல்கர் நிறைய தமிழ் படங்களில் நடித்து வருவதால் சுதா கொங்கரா படத்தில் மிக முக்கியமான ரோலில் நடிக்க துல்கரிடம் கேட்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. துல்கரும் இந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லி விட்டதாக சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால் சுர்யாவிற்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்ததில், அப்படி எந்த பேச்சும் நடத்தப்படவில்லையாம். சுர்யா, சுதா கொங்கரா இருவரும் தாங்கள் ஏற்கனவே கமிட்டான படங்களில் பணியாற்றி வருகிறார்களாம். சுர்யா தற்போது நடித்து வரும் சுர்யா 41 படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் விரைவில் கோவாவில் துவங்கப்பட உள்ளதாம். அதைத் தொடர்ந்து வாடிவாசல் படத்தில் சுர்யா நடிக்க போகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X