Jana Nayagan: மே மாதம் ஜனநாயகன் ரிலீஸ் ஆனால் ஒரே சிரிப்பா இருக்கும்.. விஜய் ஆதரவாளரே இப்படி சொல்லிட்டாரேப்பா!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படமான ஜன நாயகன் படம் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்த சென்சார் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் படத்தை உடனே ரிலீஸ் செய்யவும் முடியாது. காரணம் தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால், விஜய் படத்தை உடனே ரிலீஸ் செய்வது சிரமம் என்றே கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் படத்தை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் மே மாதம் 4ஆம் தேதிக்குப் பின் ரிலீஸ் செய்தால் படம் பார்ப்பதற்கே சிரிப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் விஜய் ஆதரவாளர் ஒருவர்.
வலைபேச்சு அந்தணன் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவான கருத்துக்களையே தெரிவித்து வருபவர். விஜய் அரசியல் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவாக பேசி வந்தவர். இப்படி இருக்கும்போது விஜய் - சங்கீதா விவாகரத்து விவகராம் மற்றும் விஜய் - த்ரிஷா சர்ச்சைக்குப் பின்னர் விஜய்க்கு எதிரான கருத்துக்களை சொல்லவில்லை என்றாலும் ஆதரவான கருத்துக்களை சொல்வதை நிறுத்திக் கொண்டார்.
இப்படி இருக்கையில் ஜன நாயகன் படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் குறித்து பேசுகையில், ஜன நாயகன் படத்தை ரிவைசிங் கமிட்டி பார்த்துவிட்டனர். சில வசனங்களை மட்டும் மியூட் செய்துள்ளனர். அதேபோல், படத்தின் கதையில் எந்த பிரச்னையும் இல்லை.

ஜன நாயகன் ரிலீஸ் தேதி: படத்தை மே மாதம் 7ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் மே மாதம் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வந்துவிடும். எப்படியும் விஜய் இந்த தேர்தலில் வெற்றி பெற மாட்டார். அப்படி இருக்கும்போது, விஜய் மற்றும் அவரது கட்சி தோல்வியைச் சந்தித்த பின்னர், அவரது படம் வெளியானால், படத்தில் இருக்கும் மாஸான டயலாக்குகள் எல்லாம் பெரிதாக ஒர்க் அவுட் ஆகாது. மேலும் தோல்வியால் அவரது ரசிகர்களும் தொண்டர்களுமே துவண்டு போயிருப்பார்கள். அப்படி இருக்கும்போது இந்த படத்தை வாக்குப்பதிவு முடிந்து, தேர்தல் முடிவுகள் வெளியிடுவதற்கு இடைப்பட்ட காலத்தில் படத்தை வெளியிட்டால் அது படத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும், ரசிகர்களும் நம்பிக்கையுடன் படத்தை பார்த்துவிட்டுப் போவார்கள் " என்று தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











