இந்த பிரச்சனை விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், நயன்தாராவோடு நிற்கட்டும்

By Siva

Recommended Video

96 விஜய்சேதுபதிக்கு ஏற்பட்ட இந்த நிலைமையை பாருங்க!- வீடியோ

சென்னை: புதுப்படங்களுக்கு கேடிஎம் பிரச்சனை மூலம் புது சிக்கல் வந்து கொண்டிருக்கிறது.

விஜய் சேதுபதி நடித்துள்ள 96 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. அதிகாலை காட்சியை பார்த்து விஜய் சேதுபதியை கொண்டாட தியேட்டர்களுக்கு சென்ற ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காரணம் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பிரச்சனைகள்

பிரச்சனைகள்

இன்றைய நவீன உலகில் படங்களை எடுத்து வெளியிடுவது சாதாரண விஷயம் அல்ல. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே காட்சிகள், புகைப்படங்கள் கசிந்து விடுகிறது. சில சமயம் படக்குழுவினரே கசிய விட்ட கொடுமை எல்லாம் நடந்திருக்கிறது. இந்த காட்சிகள், புகைப்படங்கள் கசியும் பிரச்சனை பாவம் விஜய் படங்களுக்கு அதிகம் உள்ளது.

விமர்சனம்

விமர்சனம்

படாதபாடு பட்டு ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்தால் அதை தியேட்டரில் பார்த்துவிட்டு ஆளாளுக்கு விமர்சகர்களாகி சமூக வலைதளங்களில் அதை பற்றி கருத்து தெரிவிக்கின்றனர். தியேட்டரில் படம் பார்க்கும்போதே லைவ் விமர்சனம் கொடுத்து விடுகிறார்கள். அந்த விமர்சனம் நல்லபடியாக இல்லாவிட்டால் மக்கள் தியேட்டருக்கு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்து விடுகிறார்கள்.

தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ்

ஒரு புறம் இந்த சமூக வலைதள விமர்சகர்கள் இருக்க மறுபுறம் படம் ரிலீஸான கையோடு அதை இணையதளத்தில் வெளியிட்டுவிடுகிறது தமிழ் ராக்கர்ஸ். சமூக வலைதள விமர்சனம் நன்றாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி படத்தை தமிழ் ராக்கர்ஸில் டவுன்லோடு செய்து வீட்டிலேயே பார்க்கும் ஆசாமிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

சினிமா

சினிமா

சினிமாவில் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒரு பக்கம் வளர்ச்சி இருந்தாலும், அதே அதிநவீன தொழில்நுட்பத்தால் சினிமா மெல்லச் செத்துக் கொண்டிருக்கிறது. சமூக வலைதள விமர்சனங்கள், தமிழ் ராக்கர்ஸ் ஆகியவற்றால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது. தியேட்டர்களில் டிக்கெட், பாப்கார்ன், குளிர்பானங்களுக்கு செய்யும் செலவை பார்த்து மிரளும் மக்கள் தவறு என்று தெரிந்தும் படத்தை ஆன்லைனில் பார்க்கிறார்கள். சினிமா டிக்கெட் விலையை விட பாப்கார்ன், காபி, டீ, குளிர்பானங்களின் விலை அதிகமாக உள்ளது.

பிரச்சனை

பிரச்சனை

கோடிக் கணக்கில் பணத்தை செலவு செய்து பலரின் உழைப்பால் உருவாகும் படம் இப்படி வீணாகிப் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு படம் ஓடாவிட்டால் அதில் வேலை செய்த பலரின் குடும்பம் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு எப்பொழுது தான் தீர்வு ஏற்படுமோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X