ரஜினியை இயக்கப் போகிறாரா கெளதம் வாசுதேவ மேனன்?
Recommended Video
சென்னை: ரஜினியின் அடுத்த படம் யாருக்கு என்ற கேள்வி எப்போதுமே ஆடாமல் அசையாமல் நிலை கொண்டிருப்பது வழக்கம். காரணம், பீல்டில் ரஜினிதான் இன்னும் வசூல் ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதால்.
அந்த வகையில் தற்போது ரஜினி அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். ஏ.ஆர். முருகதாஸை முடித்து விட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கப் போகிறார்.

இந்த நிலையில் கெளதம் மேனனிடம் ரஜினி கதை கேட்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. சிவா படத்துக்குப் பிறகு மேனன் படத்தில்தான் ரஜினி நடிப்பார் என்றும் சொல்கிறார்கள். எதுவும் அதிகாரப்பூர்வமாக தெரியாத வகையில் எதையும் சொல்வதற்கில்லை. மேட்டர் வெளியே வரட்டும்.. பாத்துக்கலாம்.. ஆனால் ஒன்று.. மேனன் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போகும் படத்தைப் பார்க்க இப்பவே செம ஆர்வமாக இருக்கு பாஸ்.
தீபாவளிக்கு வந்த படங்களில் பிகில், கைதி இரண்டுமே செமையாக ஓடின. நல்ல வசூலையும் எடுத்தன. அடுத்து வந்த படங்கள் ஆக்ஷன் மற்றும் சங்கத் தமிழன். இரண்டுமே சரியாக போகவில்லை. எதிர்பார்த்த வசூலையும் கொடுக்கவில்லை. கையைக் கடித்து விட்டன.
இந்த நிலையில் டிசம்பர் 6ம் தேதி ஜடா, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, இருட்டு, கேப்மாரி என மொத்தம் 6 படங்கள் வெளியாகவுள்ளனவாம். எனவே ரசிகர்களுக்கு பல மடங்கு விருந்து காத்திருக்கிறது.
தலைவி என்று ஒரு படம் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. விஜய் இயக்கியுள்ளார். அடுத்து இன்னொரு படம் அயர்ன் லேடி. இதுவும் ஜெயலலிதா கதைதான். நித்யா மேனன் நடித்துள்ளார். புதுமுக இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். நான்தான் பார்க்க அச்சு அசல் ஜெயலலிதா போலவே இருப்பேன்.. எனக்குத்தான் கெட்டப் பொருந்தும் பாருங்க என்று நித்யா மேனன் பெருமையாக கூறி வருகிறாராம்.
எப்ஐஆர் என்று ஒரு படம். விஷ்ணு விஷால் நடிக்கிறார். அவரே தயாரிக்கவும் செய்கிறார். 25ம் தேதி படப்பிடிப்பு தொடங்கி விட்டது. அடுத்த மே மாதம் படம் ரிலீஸாகுமாம். படத்தில் 3 ஹீரோயின்கள் என்பது உபரித் தகவல்.
வருடத்துக்கு ஒரு படம் தயாரிப்பதே ரொம்பக் கஷ்டம். இதில் ஒரே வருடத்தில் 3 படம் என்றால் அடேங்கப்பா என்றுதான் தோன்றுகிறது. அந்த வெற்றித் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். முதலில் எல்கேஜி வந்தது. பிறகு கோமாளி. இரண்டுமே சூப்பர் ஹிட். அடுத்த படம் பப்பி. இதற்கான விழா சென்னையில் நடந்தது. பலரும் கலந்து கொண்டு கணேஷைப் பாராட்டிப் பேசினர்.
இன்னொரு விஷயம்.. என்னை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீஸாக கணேஷ்தான் நிறைய முயற்சிகள் எடுத்தாராம்.


Click it and Unblock the Notifications











