சிம்பு, நயன் படத்தில் புதிய திருப்பம்: காதலியாக வருவாரா ஹன்சிகா?
சென்னை: இது நம்ம ஆளு படத்திற்கு பாண்டிராஜ் சிம்புவுக்கு இன்னொரு ஜோடியை தேடுகிறாராம்.
சிம்பு பாண்டிராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் பல ஆண்டுகள் கழித்து தனது முன்னாள் காதலி நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் பாண்டிராஜ் சிம்புவுக்கு இன்னொரு ஜோடியை தேடுகிறாராம்.

முதல் காதல்
இது நம்ம ஆளு படத்தில் சிம்பு ஒருவரை காதலித்து அது தோல்வியில் முடிந்துவிடுமாம். இதையடுத்து சிம்பு திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிடுவாராம்.

நயன்தாரா
திருமணமே வேண்டாம் என்று இருக்கும் சிம்புவுக்கு பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யும் பெண் தான் நயன்தாரா.

காதலி
சிம்புவின் காதலி கதாபாத்திரத்திற்கு அவருக்கு ஏற்ற ஜோடியை தேடி வருகிறாராம் பாண்டிராஜ். முதலில் இப்படி அலைந்து திரிந்து தான் நயன்தாராவை அழைத்து வந்தார் பாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா மாதிரி
சிம்புவின் காதலி கதாபாத்திரத்திற்கு நயன்தாரா மாதிரி நச்சுன்னு ஒரு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய பாண்டிராஜ் விரும்புகிறாராம். அதனால் அப்படிப்பட்ட நாயகியை தேடி அலைகிறாராம்.

ஹன்சிகா
உங்கள் படத்தில் சிம்புவின் காதலியாக அவருடைய நிஜ காதலியான ஹன்சிகாவை நடிக்க வைத்தால் கோடி கொடுத்து உங்கள் படத்தை வாங்கிக் கொள்கிறோம் என்று வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் பாண்டிராஜிடம் தெரிவித்துள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











