வித் லவ், தாய் கிழவி, யூத் வரிசையில் ஹிட்டாகுமா ‘ஹாப்பி ராஜ்’.. டிக்கெட் புக்கிங் எப்படி இருக்கு?

சென்னை: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வெற்றிப் படங்கள் மாதத்துக்கு ஒன்றோ அல்லது இரண்டோ வெளியாகி விடுகின்றன. வழக்கம் போல வாரம் 6 முதல் 8 படங்கள் வெளியானாலும் அதில், ஒரு படம் மட்டுமே தேறுகிறது. இந்நிலையில், மார்ச் 27ம் தேதியான இன்று ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள ஹாப்பி ராஜ் திரைப்படம் வெற்றிப் பட வரிசையில் சேருமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பத்திரிகையாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கான ஸ்பெஷல் ஷோ சமீபத்தில் சத்யம் தியேட்டரில் திரையிடப்பட்ட நிலையில், படத்துக்கு பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்தனர். இயக்குநர்கள் ஏ.ஆர். முருகதாஸ், நெல்சன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலரும் ஹாப்பி ராஜ் படத்தை பாராட்டியுள்ளனர்.

Will Happy Raj join like these With Love Thaai Kizhavi Youth this year Hit list

யூத் படத்தை போல இந்த படத்துக்கும் வெறித்தனமான டிக்கெட் புக்கிங் முதல் நாளில் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

இந்த ஆண்டு ஹிட்டடித்த படங்கள்: 2026ம் ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட 3 மாதங்கள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த வாரம் வெளியாகும் படத்துடன் இந்த மாதம் நிறைவடைகிறது. ஜனவரி மாதம் பொங்கல் ரேசில் வெளியான படங்களில் ஹிட் அடித்த படம் என்றால் அது ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் மட்டும் தான். குறைவான பட்ஜெட்டில் வெளியாகி சுமார் 40 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.

Will Happy Raj join like these With Love Thaai Kizhavi Youth this year Hit list

அந்த படத்தைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் வெளியான படங்களில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான வித் லவ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அந்த படமும் 40 கோடி வசூலை ஈட்டியது. அந்த மாதத்தின் இறுதியில் வெளியான தாய் கிழவி திரைப்படம் இந்த மாதமும் தொடர்ந்து தியேட்டர்களில் சக்கைப் போடு போட்டுக் கொண்டு 75 கோடி வசூலை கடந்துள்ளது.

போன வாரம் வெளியான கென் கருணாஸின் யூத் திரைப்படம் 30 கோடி வசூலை கடந்து 40 கோடி வசூலை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. தெலுங்கிலும் அந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், மேலும், வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த 4 படங்கள் தான் இந்த ஆண்டு ஹிட் அடித்த படங்கள்.

ஹாப்பி ராஜ் அந்த லிஸ்ட்டில் இணையுமா?: மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஸ்ரீகெளரி ப்ரியா, ஜார்ஜ் மரியன், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஹாப்பி ராஜ் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், அந்த படமும் இந்த வெற்றி வரிசையில் இடம்பெறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த வாரம் ஹாப்பி ராஜ் படத்துக்கு மக்கள் ஆதரவு கொடுத்தால் மட்டுமே அது சாத்தியம் என்கின்றனர்.

டிக்கெட் புக்கிங் எப்படி?: சென்னை ரோகிணி தியேட்டர் மற்றும் பிவிஆர் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ்களில் ஆரஞ்சு நிறத்தில் டிக்கெட் புக்கிங் அமோகமாக தெரிகிறது. ஆனால், சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களில் எல்லாம் இன்னமும் பச்சை வண்ணம் பல்லிளிக்கிறது. மக்கள் படத்தை பார்த்துவிட்டு பாசிட்டிவ் word of mouth சொன்னால் மட்டுமே படம் பிக்கப் ஆகும் என தெரிகிறது. வெயிட் பண்ணிப் பார்ப்போம். அப்பா - மகன் உறவு மற்றும் உருவ கேலி, ஸ்டேட்டஸ் ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட பல விஷயங்களை காமெடி கலந்து இந்த படம் ஃபீல் குட்டாக கொடுத்துள்ள நிலையில், படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஹாப்பி ராஜ் படத்துக்கு இந்த வாரமும் ஜி.வி. பிரகாஷ் இசையில் கென் நடித்த யூத் படம் டஃப் கொடுக்கும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X