இது என்னடா புதுக் கதை.. இரண்டு பாகங்களாக வெளியாகிறதா இந்தியன் 2? லீக்கான ரகசிய தகவல்!

சென்னை: இரண்டு பாகங்களாக இந்தியன் 2 படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன.

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படம் அண்மையில் 24 ஆண்டுகளை கடந்ததை கொண்டாடியது.

லைகா நிறுவனம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் கமல் நடிக்கும் இந்தியன் 2 படம் பிரம்மாண்டமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பு பணிகள்

தயாரிப்பு பணிகள்

தமிழ்நாடு அரசு, சில படங்களுக்கு தயாரிப்பு பணிகள் எனும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை செய்ய அனுமதியளித்துள்ள நிலையில், இந்தியன் 2 படத்தின் எடிட்டிங், இசை பணிகள் என பல்வேறு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கி இருக்கின்றன. கூடவே இந்தியன் 2 படம் குறித்த சில ரகசிய தகவல்களும் கசிந்து வருகின்றன.

6 மணி நேரம்

6 மணி நேரம்

இந்தியன் 2 படத்தின் 60 சதவீத ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது உள்ள ஃபுட்டேஜ் மற்றும் 6 மணி நேரம் வருவதாக தகவல்கள் கசிந்து இருக்கின்றன. இதனால், தயாரிப்பு தரப்பு, இந்த பாடத்தை இரு பாகங்களாக எடுத்து வெளியிடும் திட்டத்தையும் தீட்டி வருகிறதாம்.

புதிதல்ல

புதிதல்ல

ஏற்கனவே நடிகர் கமல்ஹாசனின் விஷ்வரூபம் படம் 2 பாகங்களாக வெளியாகி இருந்தது. அதே போல லைகா நிறுவனம் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தையும் 2 பாகங்களாக ரிலீஸ் செய்ய உள்ள நிலையில், இந்தியன் 2 படத்தையும் 2 பாகங்களாக வெளியிடப் போவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

வசூல் ரீதியாகவும்

வசூல் ரீதியாகவும்

லாக்டவுனுக்கு முன்னதாக பூந்தமல்லி அருகே நடைபெற்று வந்த இந்தியன் 2 ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் சுமார் 3 பேர் பலியாகினர். பின்னர் லாக்டவுன் போடப்பட்டு தயாரிப்பு தரப்புக்கு ஏகப்பட்ட பொருள் இழப்பை கொடுத்திருக்கிறது. இதனால், இரண்டு பாகங்களாக இந்தியன் 2வை வெளியிடுவதன் மூலம் வசூல் ரீதியாகவும் கல்லா கட்ட முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Recommended Video

எதிர் காலத்தை கனித்த உலகநாயகன் | Kamal Hassan, Vijay Sethupathi | Marudhanayagam
வதந்தி

வதந்தி

முன்னதாக இந்தியன் 2 படத்தையே லைகா நிறுவனம் கைவிடப் போவதாக வதந்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கி இருக்கும் வேலைகள் 2 பாகங்களாக அந்த படம் வெளியாகும் என்ற தகவல்கள் வைரலாகி வருகின்றன. ஆனால், இதுவரை இதுகுறித்த எந்தவொரு அறிவிப்பையும் படக்குழு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X