OTT-ல் வெளியாகிறதா ஜகமே தந்திரம்.. கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்.. நாளை காலை காத்திருக்கு சர்ப்ரைஸ்!

சென்னை: நடிகர் தனுஷின் பிறந்தநாள் ஜூலை மாதம் வரவுள்ள நிலையில், முதல் நாளிலேயே பயங்கர ட்ரீட்டுடன் ஜகமே தந்திரம் இயக்குநர் காத்துக் கொண்டிருக்கிறார்.

வரும் ஜூலை 28ம் தேதி நடிகர் தனுஷ் தனது 37வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

இந்நிலையில், ஜூலை மாதம் முழுவதும் நடிகர் தனுஷின் பிறந்தநாள் மாதமாக கொண்டாட தனுஷ் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

டிரெண்டிங்கில் ஜகமே தந்திரம்

டிரெண்டிங்கில் ஜகமே தந்திரம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம், கடந்த மே 1ம் தேதியே ரிலீஸ் ஆக வேண்டிய நிலையில், கொரோனா பரவல் அந்த படத்தின் ரிலீஸையும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறது. இந்நிலையில், தற்போது #JagameThandhiram என்ற ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மாலையில்

மாலையில்

காலையில் இருந்தே தனுஷ் ரசிகர்கள் இன்று ஏதோ ஜகமே தந்திரம் படத்தில் இருந்து அப்டேட் வரப் போகிறது என காத்திருந்தனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் மாலை 5 மணிக்கு ஜகமே தந்திரம் அப்டேட் வருகிறது என அறிவிக்க அந்த ஹாஷ்டேக்கை தனுஷ் ரசிகர்கள் டிவிட்டரே கதறும் அளவுக்கு டிரெண்ட் செய்தனர்.

நாளைக்கு தான் ட்ரீட்

நாளைக்கு தான் ட்ரீட்

இந்நிலையில், தற்போது ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து, நாளை காலை 9 மணிக்கு ஜகமே தந்திரம் படத்தின் அதிரடியான அப்டேட் வரப் போவதாக அறிவித்து, தனுஷின் பிறந்தநாள் மாத கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜின் ட்வீட்டுக்கு பின்னர், தனுஷ் ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்கில் காத்திருக்கின்றனர்.

ஆன்லைனில் ரிலீஸா?

ஆன்லைனில் ரிலீஸா?

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பெண்குயின் திரைப்படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், தனுஷின் ஜகமே தந்திரம் படத்தையும் நேரடியாக OTT தளத்தில் வெளியிட கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டு இருக்கிறாரா? என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது.

ஃபர்ஸ்ட் சிங்கிள்

ஃபர்ஸ்ட் சிங்கிள்

நேற்று சியான் விக்ரமின் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘தும்பி துள்ளல்' பாடல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஸ்ரேயா கோஷல் குரலில் வெளியான நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அல்லது டீசர் குறித்த அப்டேட் தான் நாளை காலை வெளியாகும் என்றும், இல்லையென்றால் காமன் டிபி வெளியிடும் பிரபலங்களின் பெயர் பட்டியல் வெளியாகும் என்றும் ரசிகர்கள் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X