நடிகர் ஜெய்யின் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்?
சென்னை : நடிகை ஜெய் இப்பொழுது இயக்குனர் சுசீந்திரனுடன் இணைந்து அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கு முன்பு வெளியான கேப்மாரி, மற்றும் ட்ரிபில்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
சுசீந்திரன் இயக்கியிருக்கும் ஒரு திரைப்படத்திற்கு குற்றம் குற்றமே என டைட்டில் வைக்கப்பட்டிருக்க இந்த
திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காமெடி கதை
சென்னை 28,சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து கொண்டிருந்த நடிகர் ஜெய் சமீபகாலமாக சுமாரான வெற்றி படங்களையும் தோல்விப் படங்களையும் கொடுத்துவர ரசிகர்கள் பெரும் அப்செட்டில் உள்ளனர். அதனால் அனைவரும் ரசிக்கும் வகையில் தொடர்ந்து காமெடி கதை களத்தை கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.

சுசீந்திரன் இயக்கத்தில்
சென்ற ஆண்டு வெளியான கேப்மாரி மற்றும் ட்ரிபிள்ஸ் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சுசீந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஈஸ்வரன் கடந்த பொங்கல் அன்று திரையில் வெளியாகி வசூல் சாதனை புரிந்தது.

குற்றம் குற்றமே
அதைத் தொடர்ந்து இயக்கும் திரைப்படத்திற்கு சிவசிவா மற்றும் குற்றம் குற்றமே என டைட்டில் வைக்கப்பட்டது . சிவசிவா திரைப் படத்திற்கு ஜெய் கதாநாயகனாக நடித்து இசையமைத்தும் உள்ளார். கிட்டத்தட்ட இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் திரையில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
Recommended Video

வெளியீட்டுப் பணிகள்
இதில் மூக்குத்தி அம்மன் புகழ் சும்ருதி வெங்கட, ஹரிஷ் உத்தமன், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். சென்ற மாதமே இந்த படத்தின் வெளியீட்டுப் பணிகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருக்க கொரானா அச்சம் காரணமாக தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வெளியாகும்.


Click it and Unblock the Notifications











