ஜனநாயகனை எப்போது வேண்டுமானாலும் ரிலீஸ் பண்ணுங்க.. இதை முதலில் செல்லுங்க? ரசிகர்களின் மதிப்புமிக்க கேள்வி

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்காக காத்துக் கொண்டு இருக்கும் படம் ஜனநாயகன். படம் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி பொங்கல் விடுமுறையில் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. இதனால் படம் வெளியாகும் என்ற நம்பிக்கையில் இருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது. அதேபோல் உலகம் முழுவதும் நடைபெற்ற ப்ரீ புக்கிங் பணம் எல்லாம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் என்று சில தினங்களுக்கு முன்னர் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்படி இருக்கையில் தமிழ்நாட்டில் இருக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுந்துள்ளது.

கே.வி.என் புரெடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், நாசர், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்து உருவாகி உள்ள, இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் எல்லாம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதேபோல் படத்தின் டிரைலரும் ரிலீஸ் செய்யப்பட்ட காலகட்டத்தில் உலக அளவில் டிரெண்ட் ஆனது.

Will Jana Nayagan FDFS Tickets Remain Valid Vijay Fans Raise a Crucial Question Before Release

கூடுதல் விலை: படத்தின் புக்கிங் ஓபன் ஆனதுமே ரசிகர்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்கினர். அதுவும் விஜய் படம் என்றால் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் என்பது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களால் சந்தை மதிப்பை விட கூடுதல் விலைக்கு விற்கப்படும். அதாவது 200 ரூபாய் டிக்கெட் என்பது இரண்டாயிரம், மூன்றாயிரம், ஐந்தாயிரம் என விற்பனை செய்யப்பட்டது. சட்டப்படி இது தவறு என்றாலும் ரசிகர்கள் விஜய் மீது வைத்திருக்கும் பிரியத்தை அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களே தவறாக பயன்படுத்தி ஆதாயம் தேடுகிறார்கள். இது தொடர்பாக முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் விலைக்கு பேரம் பேசிய ஆடியோக்கள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இணையத்தில் கசிந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

முதல் நாள் முதல் காட்சி: இதில் இன்னும் கவனிக்க வேண்டியது என்றால், படம் வெளியாகவில்லை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்த பின்னர், படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தவிர மற்ற எல்லா காட்சிகளுக்குமான டிக்கெட்டுக்கான பணம் ரசிகர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டது. ஆனால் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகளை பத்திரமாக வைத்திருக்க சொல்லி தியேட்டர் நிர்வாகத்தினரே பல இடங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Will Jana Nayagan FDFS Tickets Remain Valid Vijay Fans Raise a Crucial Question Before Release

ரசிகர்கள் மத்தியில் இருக்கும் கேள்வி: இந்நிலையில் படம் விரைவில் ரிலீஸ் ஆவதற்கான சமிக்ஞைகள் தெரிகிறது. படத்தின் சென்சார் அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. படம் வரும் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்ற பேச்சுக்களும் இணையத்தில் ஓடுகிறது. இப்படி இருக்கையில் ரசிகர்களுக்கு இருக்கும் மிகவும் முக்கியமான கேள்வி என்றால் அது, நாங்கள் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி வைத்திருக்கும் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் செல்லுமா? செல்லாதா என்பதுதான். இந்த கேள்வி ரசிகர்கள் பலருக்கும் தமிழ்நாடு முழுவதும் உள்ளது என்று இணையத்தில் விஜய் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X