Jana Nayagan: விஜய் பிறந்தநாளுக்குத்தான் ஜனநாயகன் வெளியாக வாய்ப்பிருக்கா?.. அப்போ டைட்டில் கார்டு!

சென்னை: ஜன நாயகன் பிப்ரவரி நாயகனாக வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்னமும் அந்த படத்தை ரிவைசிங் கமிட்டி பார்க்கவே நேரம் ஒதுக்கவில்லை என வெளியான தகவல்களால் ஜூன் நாயகனாக மாறப் போகிறது என ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன. அதுவும் நல்லதுக்குத்தான் அப்போ டைட்டில் கார்டு வெறித்தனமாக மாறிவிடும் என விஜய் ரசிகர்களும் கெத்து காண்பித்து வருகின்றனர்.

விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் பெண்களின் பாதுகாப்பை மையப்படுத்தி உருவான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்பது டிரைலரை பார்க்கும் போதே தெரிந்து விட்டது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் அந்த படத்தில் நடித்துள்ளனர்.

Will Jananayagan Release on Vijay s Birthday
Photo Credit:

இந்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகி இருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபீஸ் கிராஃப் மிகப்பெரிய அளவில் உயர்ந்து பல தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சந்தோஷத்தில் ஆழ்ந்து இருப்பார்கள் என்கின்றனர். ஆனால், ஜன நாயகன் திரைப்படம் சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு தான் வெளியாகும் என உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏப்ரல் மாதம் வரை வாய்ப்பில்லை: பிப்ரவரி 20ம் தேதி அல்லது 26ம் தேதி ஜனநாயகன் திரைப்படம் எப்படியும் வந்துவிடும் என நினைத்துக் கொண்டிருந்த தளபதி ரசிகர்கள் கனவை கலைக்கும் விதமாக ஓவர்சீஸ் விநியோகஸ்தர் வெளியிட்ட அறிக்கை காரணமாக ஏப்ரல் மாதம் வரை ஜனநாயகன் வெளியாக வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகி விட்டது.

விஜய் பிறந்தநாள் ட்ரீட்: மே மாதம் ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்புகள் குறைவுதான் என்றும் ஜூன் மாதம் தான் ஜனநாயகன் வெளியாகும் என்கின்றனர். விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜூன் 18ம் தேதி வியாழக்கிழமை ஜனநாயகன் திரைப்படம் வெளியானால் தொடர்ந்து 4 நாட்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹவுஸ்ஃபுல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விஜய்யின் பிறந்தநாள் ட்ரீட்டாகவும் ஜனநாயகன் மாறும் என்கின்றனர். ஆனால், தேர்தலுக்கு முன்னதாக ஜனநாயகன் திரைப்படம் எவ்வளவு சீக்கிரம் சென்சார் பிரச்னையை சரி செய்து வெளியாகிறதோ அதுதான் தளபதி ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X