பொங்கலுக்கு 'கோச்சடையான்', 'வீரம்' கன்ஃபர்ம்: அப்போ 'ஜில்லா'?
சென்னை: பொங்கலுக்கு கோச்சடையான் மற்றும் வீரம் ஆகிய படங்கள் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் விஜய்யின் ஜில்லா நிச்சயமாக பொங்கலுக்கு ரிலீஸாகுமா என்பது தெரியவில்லை.
பல ஆண்டுகள் கழித்து விஜய் மற்றும் அஜீத் படங்கள் வரும் பொங்கலுக்கு மோதவிருந்தன. இந்நிலையில் எப்பொழுது ரிலீஸாகும் என்று தெரியாமல் இருந்த ரஜினியின் கோச்சடையான் பொங்கலுக்கு வருகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
பொங்கல் போட்டியில் ரஜினியின் படம் திடீர் என்று வந்துள்ளது பிற படங்களின் ரிலீஸ் தேதியை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது.

தியேட்டர்கள்
ரஜினியின் படம் வந்தால் வசூலை அள்ளிவிடலாம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் நினைக்கிறார்கள். இதனால் பொங்கலுக்கு அதிக தியேட்டர்களில் கோச்சடையான் வெளியாவது உறுதி.

வீரம்
என்ன தான் கோச்சடையானுக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டாலும் போட்டியில் இருந்து வீரம் பின்வாங்க தயாராக இல்லை. இதனால் அறிவித்தபடி அஜீத்தின் வீரம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது.

விற்பனையாகிவிட்டது
விஜய்யின் ஜில்லா படத்தின் வினியோக உரிமை அதிவேகமாக விற்றுவிட்டது. இந்த பொங்கல் தளபதி பொங்கல் என்று விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

ஜில்லா வருமா?
ரஜினி படம் ரிலீஸாவதால் அதிக தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இதனால் வசூலும் பாதிக்கப்படும். இந்நிலையில் ஜில்லா பொங்கலுக்கு நிச்சயம் ரிலீஸாகுமா என்று தெரியவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications











