கன்னடப்படத்தின் மூலம் மீண்டும் இணையும் ரவிச்சந்திரன் - ஜூகி சாவ்லா

By Mayura Akilan

பெங்களூர்: கன்னடத் திரையுலகில் பெரும் வசூல் சாதனை படைத்த படமான பிரேம லோகா படத்தின் ஜோடிகளான ரவிச்சந்திரனும், ஜூஹி சாவ்லாவும் மீண்டும் இணையப் போகின்றனர்.

கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் பெரும் வெற்றி பெற்ற படம் பிரேமலோகா. ரவிச்சந்திரனுக்கு மிகப் பெரிய ஸ்டார் அந்தஸ்தும் இந்தப் படத்தின் மூலம்தான் கிடைத்தது. இந்தியில் நடிப்பதற்கு முன்பு ஜூஹி நடித்த படமும் இதுதான்.

ஆனால் தற்போது ஜூஹியும், ரவிச்சந்திரனும் வேறு ஒரு கன்னடப் படத்தில் இணையவுள்ளனராம்.

தெலுங்கு மிர்ச்சி

தெலுங்கு மிர்ச்சி

தெலுங்கில் வெளியான மிர்ச்சி படத்தை சுதீப் கன்னடத்தில் ரீமேக் செய்யவுள்ளார்.

ரம்யாவுடன் ஜோடி

ரம்யாவுடன் ஜோடி

ஜஸ்ட் மாத் மாத்தளி படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ரம்யாவுடன் இப்படத்திற்காக மீண்டும் இணையவுள்ளார்.

அப்பாவாக ரவிச்சந்திரன்

அப்பாவாக ரவிச்சந்திரன்

இப்படத்தில் தனக்கு அப்பா வேடத்தில் நடிக்குமாறு ரவிச்சந்திரனை கேட்டுள்ளாராம் சுதீப்.

அம்மாவாக வருவாரா ஜூஹி

அம்மாவாக வருவாரா ஜூஹி

ரவிச்சந்திரனுக்கு ஜோடியாக ஜூஹி சாவ்லாவைத் தேர்வு செய்துள்ளாராம் சுதீப். இதுதொடர்பாக அவரை அணுகவும் போகிறாராம்.

பிரேமலோகா மாஜிக் மீண்டும்...

பிரேமலோகா மாஜிக் மீண்டும்...

ரவிச்சந்திரன்தான் ஜூஹியை திரைப்படங்களில் அறிமுகப்படுத்தியவர். எனவே அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடித்தால் படத்திற்கு நல்ல பிரபலம் கிடைக்கும் என்பது சுதீப்பின் திட்டமாகும்.

ஹீரோவுக்கு அம்மாவாக....

ஹீரோவுக்கு அம்மாவாக....

இதுகுறித்து ஜூஹி கூறுகையில், என்னிடம் கேட்டிருக்கிறார்கள். ரவிச்சந்திரனுக்கு ஜோடியாக நடிக்க அணுகியுள்ளனர். இன்னும் ஒப்பந்தமாகவில்லை. நல்ல படம்தான், சந்தேகம் இல்லை. ஆனால் ஹீரோவுக்கு அம்மாவாக நடிப்பதுதான் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது.. பார்க்கலாம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X